Wednesday, October 16, 2019

† புனிதர் ஜியுசெப்பினா வன்னினி † (அக்டோபர் 16)


இன்றைய புனிதர்
(அக்டோபர் 16)

புனிதர் ஜியுசெப்பினா வன்னினி
(St. Giuseppina Vannini)

அருட்சகோதரி, நிறுவனர், ஏழை அனாதைகளின் பாதுகாவலர்:
(Religious and Defender of Poor Orphans)

பிறப்பு: ஜூலை 7, 1859
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

இறப்பு: பிப்ரவரி 23, 1911 (வயது 51)
ரோம், இத்தாலி இராச்சியம்
(Rome, Kingdom of Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: அக்டோபர் 16, 1994
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 13, 2019
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 16

பாதுகாவல்:
தூய காமிலஸின் மகள்கள் சபை (Daughters of Saint Camillus), இருதய நோயாளிகள், அனாதைகள், எந்தவொரு நோயாலும் பாதிக்கப்பட்டவர்கள், நோயுற்ற பெற்றோர், ஆசிரியர்கள், இளம் சிறார், மருத்துவமனைகள், மறைப்பணியாற்றும் பெண்கள்

புனிதர் ஜியுசெப்பினா வன்னினி (ஜோசஃபின் வன்னினி), இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க "காமிலியன்" (Camillian) சபையின் ஒரு அருட்சகோதரியாவார். இவர், அருளாளர் "லூய்கி டெஸ்ஸா" (Blessed Luigi Tezza) என்பவருடன் இணைந்து, "தூய காமில்லஸின் மகள்கள்" (Daughters of Saint Camillus) எனும் ஆன்மீக சபையினைத் தோற்றுவித்தார்.

குழந்தைப் பருவத்திலேயே அவரும், அவருடைய இரண்டு உடன்பிறந்த சகோதரர்களும், அனாதையான காரணத்தினால், வெவ்வேறு இடங்களில் வாழ பிரிந்தார்கள். அவர், ரோம் நகரிலே கன்னியாஸ்திரிகளின் மேற்பார்வையில் வளர்க்கப்பட்டு கல்வி பயின்றார். அங்கே, மறைப்பணிகளுக்கான அவரது பணி பலப்படுத்தப்பட்டது.

வன்னினி பின்னர் மத வாழ்க்கையில் இணைய முயன்றார். ஆனால் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், தனது புதுமுக பயிற்சி காலகட்டத்தில் (Novitiate) வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கி.பி. 1891ம் ஆண்டு, அவர் "லூய்கி டெஸ்ஸா" (Luigi Tezza) என்பவரை சந்தித்தார். இருவரும் இணைந்து "தூய காமில்லஸின் மகள்கள்" (Daughters of Saint Camillus) எனும் ஆன்மீக சபையினைத் தோற்றுவித்தனர். வன்னினி இறக்கும்வரை அச்சபையின் சுப்பீரியர் ஜெனரலாக (Superior General) பணியாற்றினார். அந்த காலகட்டத்தில், கி.பி. 1900ம் ஆண்டு, டெஸ்ஸா (Tezza) தென் அமெரிக்காவிலுள்ள (South America) பெரு (Peru) நாட்டின் தலைநகரான லிமாவில் (Lima) வசித்திருந்தார்.

1994ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 16ம் நாளன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II) அவர்களால் முக்திப்பேறு பட்டமளிக்கப்பட்ட இவருக்கு, திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) அவர்கள் 2019ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 13ம் நாளன்று புனிதராக அருட்பொழிவு செய்தார்.

"ஜியுடிட்டா வன்னினி" (Giuditta Vannini) எனும் இயற்பெயர் கொண்ட ஜியுசெப்பினா வன்னினி, சமையல்காரராக  (Cook) பணிபுரிந்துவந்த "ஏஞ்சலோ வன்னினி" (Angelo Vannini) மற்றும் அன்னுன்ஸியாட்டா பாப்பி" (Annunziata Papi) ஆகியோரது மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக 1859ம் ஆண்டு, ஜூலை மாதம், 7ம் தேதியன்று, ரோம் நகரில் பிறந்தார். அவரது இரண்டு உடன்பிறந்த சகோதரர்கள் "கியுலியா" (Giulia) மற்றும் "அகஸ்டோ" (Augusto) ஆவர்.

அவரது தந்தை 1863ம் ஆண்டு இறந்தார். அவரது தாயார் 1866ம் ஆண்டு இறந்தார். எனவே ஏழு வயது ஜியுடிட்டாவும் அவரது இரண்டு உடன்பிறப்புகளும் மிகவும் இளமையாக இருந்தபோதே அனாதையானார்கள். "வின்சென்டியன் சகோதரிகளின்" (Vincentian sisters) பராமரிப்பில், ஜியுடிட்டா "டொர்லோனியா" (Torlonia) நகரிலுள்ள அனாதை இல்லத்திற்குச் சென்றதால், பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு குழந்தைகள் பிரிந்தனர். அவரது சகோதரி "தூய சூசையப்பரின் சகோதரியர்" இல்லத்திற்கு சென்றார். அவர்களது சகோதரர் தமது தாய் மாமாவிடம் சென்றார். மழலையர் பள்ளி ஆசிரியையாக ஆவதற்கு முதலில் ஆர்வம் காட்டிய ஜியுடிட்டா, இறுதியில் ஆன்மீக வாழ்க்கையை முடிவு செய்தார்.

ஆன்மீக வாழ்க்கைக்கான பணிகள்:
"சியெனா" (Siena) நகரிலுள்ள "வின்சென்டியன் சகோதரியர்" சபையின் (Congregation of Vincentian sisters)  "கருணையின் மகள்கள்"  இல்லத்தில், புகுமுக பயிற்சியில் (Novitiate) சேர அவர் முடிவு செய்தார்.  ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் 1887ம் ஆண்டு, நோயுற்ற காரணங்களுக்காக ரோம் நகர் திரும்ப வேண்டியிருந்தது, ஆனால் 1888ம் ஆண்டில் தனது ஆன்மீக உருவாக்கத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்தார்.

தமது நிலை என்னவென்று நிச்சயமாகத் தெரியாத குழம்பியிருந்த நிலையில், கி.பி. 1891ம் ஆண்டு, ஒரு ஆன்மீக தியான நிகழ்வில் அருட்தந்தை லூய்கி டெஸ்ஸாவை (Father Luigi Tezza) சந்தித்தார். அவர், ஒப்புரவு அருட்சாதனத்தில் டெஸ்ஸாவின் ஆலோசனையை வேண்டினார். நோயுற்றவர்களைப் பராமரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட,  அனைத்து பெண்களுக்கான ஆன்மீக சபை ஒன்றினை அமைப்பதில் அருட்தந்தை லூய்கி டெஸ்ஸா ஆர்வம் காட்டினார்.

பல வாரங்கள் பகுத்தறிதலின் பின்னர், ஜியுடிட்டா அருட்தந்தை டெஸ்ஸாவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். 1892ம் ஆண்டு, மார்ச் மாதம், அவரும் அவரது இரண்டு தோழிகளும் காமிலியன் மூன்றாம் நிலை சபையின் ஆன்மீக சீருடைகளை பெற்றனர். "ஜியுசெப்பினா" எனும் பெயரை தமது ஆன்மீகப் பெயராக ஏற்றுக்கொண்ட இவர், 1895ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதியன்று, தாமும், அருட்தந்தை லூய்கி டெஸ்ஸாவும் இணைந்து நிறுவிய "தூய காமிலஸின் மகள்கள்" (Daughters of Saint Camillus) சபையின் "சுப்பீரிய ஜெனரல்" - தலைவராக - (Superior General) நியமிக்கப்பட்டார்.

19ம் நூற்றாண்டின் இறுதியில் கிரெமோனா (Cremona), மெசாக்னே (Mesagne) மற்றும் பிரிண்டிசி (Brindisi) ஆகிய நகரங்களில் புதிய சமூகங்கள் திறக்கப்பட்ட நிலையில், வறுமையின் சூழலில் இருந்தபோதிலும் சபை வளரத் தொடங்கியது.

எவ்வாறாயினும், "தூய காமிலஸின் மகள்கள்" (Daughters of Saint Camillus) சபைக்கு, திருச்சபையின் ஒப்புதல் பெறுவது கடினமாக இருந்தது. ஏனெனில், திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ (Pope Leo XIII), புதிய ஆன்மீக சபைகளை அமைப்பதனை அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார்.

அருட்தந்தை டெஸ்ஸாவுக்கு, சபையில் உள்ள பெண்களுடனான உறவு, மோசமான விமரிசனங்களுக்கு உட்பட்டது. ஆனால் அவர் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்ள மறுத்துவிட்டார். ரோம் நகரை விட்டு வெளியேறிய அவர், பெரு நாட்டின் தலைநகரான லிமாவுக்குச் சென்றார். தமது மீதமுள்ள வாழ்நாட்களை அவர் அங்கேயே கழித்தார்.

இப்போது, "தூய காமிலஸின் மகள்கள்" (Daughters of Saint Camillus) சபையின் சமூகத்திற்கு அன்னை ஜியுசெப்பினா பொறுப்பேற்றிருந்தார். மேலும், கடவுளின் உதவியில் நம்பிக்கையுடன் இருந்த அவர், அதற்கான பலம் பெற்றிருந்தார். ஃபிரான்ஸ் (France), அர்ஜென்டினா (Argentina) மற்றும் பெல்ஜியம் (Belgium) ஆகிய நாடுகளில் இல்லங்களைக் கொண்டிருந்த இவர்களது சமூகம் உலகம் முழுவதும் பரவியது. சபை இறுதியாக 1909ம் ஆண்டு,  அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றது.

1910ம் ஆண்டு வாக்கில், தீவிரமான இதய நோயால் பாதிக்கப்பட்ட அன்னை ஜியுசெப்பினாவின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. 1911ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், தனது 51 வயதில் அவர் மரித்தார். அவரது உடல் முதலில் ரோமில் (Rome) உள்ள "வெரானோ" கல்லறையில் (Verano Cemetery) அடக்கம் செய்யப்பட்டது, ஆனால் 1932ம் ஆண்டில், வெளியேற்றப்பட்ட அவரது மிச்சங்கள், "தூய காமிலஸின் மகள்கள்" (Daughters of Saint Camillus) சபையின் தலைமை இல்லத்தின் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 1976ம் ஆண்டு,  மீண்டும் அவை "க்ரோட்டாஃபெராட்டா" (Grottaferrata) நகரில் உள்ள புதிய தலைமை இல்லத்தின் சிற்றாலயத்திற்கு (Chapel of the new General house) மாற்றப்பட்டன.

அற்புதங்கள்:
மெலனின் உருவாக்கும் உயிரணுக்களின் கட்டி, பொதுவாக தோல் புற்றுநோயுடன் தொடர்புடைய ஒரு வீரியம் மிக்க கட்டி (A tumor of melanin-forming cells, typically a malignant tumor associated with skin cancer), மற்றும் முடக்குவாதம் (Paralyzing) ஆகிய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த "ஒல்கா நியூனேஸ்" (Olga Nuñez) ஒரு பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அந்த மருத்துவமனையில் சேவை செய்துகொண்டிருந்த "தூய காமிலஸின் மகள்கள்" சபையின் அருட்சகோதரியர், அன்னை ஜியுசெப்பினாவின் மிச்சம் ஒன்றினை நோயாளியின் படுக்கையில் வைத்து தொடர் நவநாள் ஜெபம் சொல்லிவர, அந்நோய் அதிசயமாக குணமாயிற்று. இது ஒரு அற்புதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

"பிரேசில்" (Brazil) நாட்டின்  "சினோப்" (Sinop) நகரைச் சேர்ந்த "ஆர்னோ செல்சன் கிளாக்" (Arno Celson Klauck) என்ற ஒரு கட்டுமானத் தொழிலாளி, மூன்று தளங்களைக் கொண்ட ஒரு கட்டிடத்தின் உயரே லிஃப்ட் தண்டுக்கு கீழே மரக் கற்றைகளை வைத்துக்கொண்டிருந்த வேளையில், தவறி கீழே விழுந்தார். அவர் விழும்போது, அன்னை ஜியூசெப்பினாவின் உதவியை தன்னிச்சையாக அழைத்தார். மேலும் சில காயங்கள் தவிர அவர் உயிர் தப்பினார். இது இரண்டாவது அற்புதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment