Tuesday, December 31, 2019

† புனிதர் இளைய மெலனியா † (டிசம்பர் 31)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 31)

✠ புனிதர் இளைய மெலனியா ✠
(St. Melania the Younger)

பாலைவனத்து அன்னை:
(Desert Mother)

பிறப்பு: கி.பி 383
ரோம் (Rome)

இறப்பு: டிசம்பர் 31, 439
ஜெருசலேம் (Jerusalem)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
மரபுவழி திருச்சபை
(Orthodox Church)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
(Eastern Catholic Churches)

நினைவுத் திருநாள்: டிசம்பர் 31

புனிதர் இளைய மெலனியா, ஒரு கிறிஸ்தவ புனிதரும், மற்றும் "பாலைவனத்து தாய்" (Desert Mother) என்று அழைக்கப்பட்டவரும் ஆவார். இவர் பேரரசர் "முதலாம் தியோடோசியஸின்" (Theodosius I) மகன், பேரரசர் "ஹொனொரியஸ்" (Emperor Honorius) ஆட்சி காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். இவர், "பாலைவனத்து தாய்" (Desert Mother) என்று அழைக்கப்பட்ட பெரிய மெலனியாவின் (Melania the Elder) மகன்வழி பேத்தி ஆவார்.

இவர், பண்டைய ரோம அதிகாரியான (Proconsul of Achaea) "வலேரியஸ் மேக்சிமஸ் பசிலியஸ்" (Valerius Maximus Basilius) மற்றும் "பெரிய மெலனியா" (Melania the Elder) ஆகியோரின் மகனான "வலேரியஸ் பப்லிகோலா" (Valerius Publicola) மற்றும் அவரது மனைவியான "அல்பினா" (Albina) ஆகியோருக்குப் பிறந்தவர் ஆவார். இவர், தமது தந்தை வழி உறவினரான "வலேரியஸ் பினியானஸ்" (Valerius Pinianus) என்பவரை, தமது பதினான்கு வயதில் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களிருவரும், தமக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளின் ஆரம்பகால மரணங்களுக்குப் பிறகு கிறிஸ்தவ துறவறத்தைத் தழுவி, பின்னர் பிரம்மச்சரியமான வாழ்க்கையை வாழ்ந்தனர். தனது பெற்றோரின் செல்வத்தை வாரிசாகப் பெற்றபின், அதை அநாமதேய இடைத்தரகர்கள் மூலம் திருச்சபை நிறுவனங்களுக்கும் ஏழைகளுக்கும் நன்கொடையாக வழங்கினார்.

கி.பி. 410ம் ஆண்டு, அவர்கள் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்தனர். அங்கே, பண்டைய கிறிஸ்தவ இறையியளாராகிய (Early Christian Theologian) புனிதர் "ஹிப்போவின் அகுஸ்தினார்" (St. Augustine of Hippo) அவர்களுடன் நட்பு கொண்டனர். அவருடன் இணைந்து, பக்தி மற்றும் தொண்டு பணிகளின் வாழ்க்கையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.

அங்கே, அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு கான்வென்ட்டை நிறுவினார்கள். மெலனியா, அதன் அன்னை சுப்பீரியர் ஆனார். அதன் நிர்வாகப் பொறுப்புகளை அவருடைய கணவர் "பினியானஸ்" ஏற்றார். கி.பி. 417ம் ஆண்டு, அவர்கள் அலெக்ஸாண்ட்ரியா (Alexandria) வழியாக பாலஸ்தீனத்திற்கு (Palestine) பயணம் செய்தனர். அங்கே, ஆலிவ் மலைக்கு (Mount of Olives) அருகிலுள்ள ஒரு துறவு மடத்தில் (Hermitage) வசித்தனர். அங்கேயும் மெலனியா ஒரு கான்வென்ட்டை நிறுவினார்.

கி.பி. 420ம் ஆண்டு, பினியானஸ் இறந்த பிறகு, மெலனியா ஆண்களுக்காக ஒரு துறவு மதத்தையும், ஒரு தேவாலயத்தையும் கட்டினார். அங்கு அவர் தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியைக் கழித்தார்.

மெலனியா, சிசிலி (Sicily) நாட்டிலும், பிரிட்டனிலும் (Britain) பரந்த நிலங்களை சொத்துக்களாகக் கொண்டிருந்தார். "ஐபீரியா" (Iberia), "ஆப்பிரிக்கா" (Africa), "நுமிடியா" (Numidia), "மௌரெட்டானியா" (Mauretania ) மற்றும் இத்தாலி (Italy) ஆகிய நாடுகளிலும் பெரும் தோட்டங்களை வைத்திருந்தார்.

ஜெரொன்டியஸ் (Gerontius), அவரது தோட்டங்களில் ஒன்றை பின்வருமாறு விவரிக்கிறார்:
ஒருபுறம் கடலும், மறுபுறம் பலவிதமான விலங்குகள் மற்றும் விளையாட்டுகளைக் கொண்ட சில வனப்பகுதிகள் உள்ளன. அதனால் அவர் குளத்தில் குளிக்கும்போது கப்பல்கள் கடந்து செல்வதையும், காடுகளில் விளையாட்டு விலங்குகளையும் காண முடிந்தது. இந்த சொத்துக்கள் ஒவ்வொன்றிலும், அறுபது பெரிய வீடுகள் இருந்தன. அவற்றில் ஒவ்வொன்றிலும் நானூறு விவசாய அடிமைகள் இருந்தனர். இவ்வாறு, இந்த ஒரு சொத்தில் 24,000 அடிமைகள் இருந்தனர்.

கி.பி. 452ம் ஆண்டு, "ஜெரொன்டியஸ்" (Gerontius) என்பவர், மெலனியாவைப் பற்றி எழுதிய ஒரு வாழ்க்கை வரலாற்றில், அவரது துறவு வாழ்க்கையைப் பற்றி எழுதியிருந்தார். மேலும், அவரது வாழ்க்கையைப் பற்றி "பல்லடியஸ்" () என்பவர், கி.பி. 431ம் ஆண்டு, சுயசரிதம் எழுதியிருந்தார்.

No comments:

Post a Comment