Friday, December 20, 2019

† புனிதர் விசென்ஸோ ரொமானோ † (டிசம்பர் 20)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 20)

✠ புனிதர் விசென்ஸோ ரொமானோ ✠
(St. Vincenzo Romano)

குரு:
(Priest)

பிறப்பு: ஜூன் 3, 1751
டோரே டெல் கிரேகோ, நேபிள்ஸ், நேபிள்ஸ் இராச்சியம்
(Torre del Greco, Naples, Kingdom of Naples)

இறப்பு: டிசம்பர் 20, 1831 (வயது 80)
டோரே டெல் கிரேகோ, நேபிள்ஸ், இரண்டு சிசிலிகளின் இராச்சியம்
(Torre del Greco, Naples, Kingdom of the Two Sicilies)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: நவம்பர் 17, 1963
திருத்தந்தை பால் ஆறாம் பவுல்
(Pope Paul VI)

புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

முக்கிய திருத்தலம்:
பசிலிக்கா டி சாண்டா கிராஸ், இத்தாலி
(Basilica di Santa Croce, Italy)

நினைவுத் திருநாள்: டிசம்பர் 20

பாதுகாவல்:
டோரே டெல் கிரேகோ (Torre del Greco), அனாதைகள் (Orphans), மாலுமிகள் (Sailors), தொண்டைக் கட்டிகளுக்கு எதிராக (Against throat tumors), நியோபோலிட் குருக்கள் (Neapolitan Priests).

"வின்சென்சோ டொமினிகோ ரொமானோ" (Vincenzo Dominico Romano) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் வின்சென்சோ ரொமானோ (Vincenzo Romano), ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குரு ஆவார். நேபிள்ஸில் (Naples) உள்ள "டோரே டெல் கிரேகோவில்" (Torre del Greco) பிறந்தார். ரொமானோ, ஹெருலானோ (Herulano) கிராமத்தின் பங்குத்த தந்தையாக இருந்தார். எளிமையான மற்றும் பணிவான வாழ்க்கை வாழ்ந்த அவர், அனாதைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். ஆனால் அவரது பகுதியில் இருந்த ஃபிரெஞ்சு படையெடுப்பாளர்கள் (French invaders) சிலரும், உள்ளூர் இத்தாலிய அரசியல் குழுக்கள் சிலரும், அவரையும் அவரது சேவைப்பணிகளையும் எதிர்த்தனர். ரோமானோ, ஏழைகளுக்காக அயராது உழைத்ததாலும், "நியோபோலிடன்" (Neapolitan Region) பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களின் சமூகத் தேவைகளுக்குமான அவரது அர்ப்பணிப்பு காரணமாகவும் "டோரே டெல் கிரேகோவின்" (Torre del Greco) மக்கள் அவருக்கு "தொழிலாளி குரு" (The Worker Priest) என்ற புனைப்பெயரை வழங்கினர். கி.பி. 1794ம் ஆண்டு, "வெசுவியஸ்" (Mount Vesuvius) மலை வெடித்ததைத் தொடர்ந்து, நேபிள்ஸின் பெரும்பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் அவர் குறிப்பிடப்பட்டார். அப்பணிகளில், அவரே இடிபாடுகளை அகற்றி மறுகட்டுமான முயற்சிகளை ஏற்பாடு செய்தார்.

வின்சென்சோ ரொமானோ, கி.பி. 1751ம் ஆண்டு, ஜூன் மாதம், 3ம் தேதி, ஏழை பெற்றோர்களான "நிக்கோலா லூகா" (Nicola Luca) மற்றும் "மரியா கிரேசியா ரிவிசியோ" (Maria Grazia Rivieccio) ஆகியோருக்கு "நேபிள்ஸில்" பெருநகரில் உள்ள "டோரே டெல் கிரேகோ" நகரில் பிறந்தார். ரொமானோ, ஜூன் 4ம் தேதி, "சாண்டா க்ரோஸ்" (Santa Croce Church) தேவாலயத்தில் திருமுழுக்கு பெற்றார். இவருக்கு, "பியட்ரோ" (Pietro) மற்றும் "கியூசெப்" (Giuseppe) ஆகிய இரண்டு சகோதர்களும் இருந்தனர்.

புனிதர் "அல்போன்சஸ் மரியா டி லிகுயோரியின்" (St. Alphonsus Maria de' Liguori) எழுத்துக்களைப் படித்த அவர், குழந்தைப் பருவத்திலேயே ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின் மீது வலுவான பக்தியை வளர்த்துக் கொண்டார். அவர் ஒரு பொற்கொல்லராக மாற வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்தே மகனின் திருச்சபை விருப்பங்களை அவரால் காண முடிந்தது. மேலும் அவரது மகனின் விருப்பத்திற்கு அவர் வருந்தினார். ஒரு கத்தோலிக்க குருவான அவரது மூத்த சகோதரர் பியட்ரோ, தமது தம்பியின் விருப்பத்தை ஆதரித்தார். தமது புரவலர் ஒருவரது உதவியுடன் அவர் தமது இறையியல் கல்வியை தொடங்கினார்.

தமது பதினான்கு வயதில், நேபிள்ஸில் மாநகரில், குருத்துவத்திற்கான தனது இறையியல் கல்வியை கற்க தொடங்கிய ரொமானோ, கி.பி. 1775ம் ஆண்டு, ஜூன் மாதம், 10ம் தேதியன்று,"சாண்டா ரெஸ்டிடியூட்டா" (Basilica di Santa Restituta) பேராலயத்தில் குருத்துவ அருட்பொழிவு  பெற்றார்.  தமது முதல் திருப்பலியை, ஜூன் மாதம், 11ம் தேதியன்று, "சாண்டா க்ரோஸ்" (Santa Croce Church) தேவாலயத்தில் நிகழ்த்தி கொண்டாடினார். தமது குருத்துவ படிப்பின்போது, அருட்தந்தை "மரியானோ ஆர்க்கீரோ" (Mariano Arciero) என்பவர், இவரது ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார். புனிதர் "அல்போன்சஸ் மரியா டி லிகுரியின்" (St. Alphonsus Maria de' Liguori) வாழ்க்கை மற்றும் போதனைகளையும் கற்று, ஆய்வு செய்தார்.

"டோரே டெல் கிரேகோ" (Torre del Greco) எனும் பங்குக்கு இவர் உதவி - பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார், மேலும் அவரது எளிமையான மற்றும் கடினமான வாழ்க்கை முறையாலும், மற்றும் அனாதைகளைப் பராமரிப்பதில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினாலும், பங்குப்பணிகளை குருமாணவர்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும் புகழ் பெற்றார்.

கி.பி. 1794ம் ஆண்டு, ஜூன் மாதம், 15ம் தேதி, "வெசுவியஸ்" (Mount Vesuvius) மலை வெடித்துச் சிதறியது. இதனைத் தொடர்ந்து, தமது "சாண்டா க்ரோஸ்" (Santa Croce) ஆலயம் உள்ளிட்ட நேபிள்ஸ் நகரின் பெரும்பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகள் அளப்பற்றவை. பேரழிவைத் தொடர்ந்து புனரமைப்பு முயற்சிகளை ஒழுங்கமைக்க அவர் மணிநேரங்களை அர்ப்பணித்தார். மேலும் தனது  கைகளாலேயே பெரிய இடிபாடுகளைத் அகற்றும் பணிகளையும் செய்தார். பேரழிவு நேரத்தில், அவர் சாண்டா குரோஸ் தேவாலய பொருளாளராகவும், உதவி பங்குத்தந்தையாகவும் பணியாற்றினார். கி.பி. 1799ம் ஆண்டு, இவரது பங்குத்தந்தை இறந்த பிறகு, அவர் திருச்சபையின் பங்குத்தந்தை ஆனார். அத்துடன், தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப தன்னை அர்ப்பணித்தார். கி.பி. 1795ம் ஆண்டு, மறுகட்டமைப்பை தொடங்கி கையாண்டார். மேலும், இவரது தேவாலயம், 32 வருடகால பணிகளின் பின்னர், கி.பி. 1827ம் ஆண்டு, மீண்டும் அர்ச்சிக்கப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டது. அவர் அனைத்து தரப்பு மக்களுக்கும், வார இறுதியில் ஐந்து முறை பிரசங்கித்தார்.

கி.பி. 1825ம் ஆண்டு, ஜனவரி மாதம், முதல் தேதியன்று, தவறி கீழே விழுந்த அவரது இடது தொடை எலும்பு முறிந்தது. இதன் காரணமாக, அவரது உடல்நலத்தில் மெதுவான சரிவைத் தொடங்கியது. நீண்ட காலம் நோயுடன் போராடிய ரொமானோ, கி.பி. 1831ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 20ம் நாளன்று, மரித்தார். அவரது உடல், சாண்டா க்ரோஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கி.பி. 1990ம் ஆண்டு, நவம்பர் மாதம், 11ம் தேதியன்று,  நேப்பிள்ஸ் (Naples) மாநகருக்கு விஜயம் செய்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II), இவரது கல்லறைக்கு விஜயம் செய்தார்.

கி.பி. 1963ம் ஆண்டு, திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI) அவர்களால் முக்திப்பேறு பட்டமளிக்கப்பட்ட இவரை, திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) அவர்கள் 2018ம் ஆண்டு, புனிதராக உயர்த்தி அருட்பொழிவு செய்தார்.

No comments:

Post a Comment