Wednesday, December 18, 2019

† அருளாளர் ஆன்டோனியோ கிரஸ்ஸி † (டிசம்பர் 18)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 18)

✠ அருளாளர் ஆன்டோனியோ கிரஸ்ஸி ✠
(Blessed Antonio Grassi)

குரு:
(Priest)

பிறப்பு: நவம்பர் 13, 1592
ஃபெர்மோ, திருத்தந்தையர் மாநிலங்கள்
(Fermo, Papal States)

இறப்பு: டிசம்பர் 13, 1671 (வயது 79)
ஃபெர்மோ, திருத்தந்தையர் மாநிலங்கள்
(Fermo, Papal States)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 30, 1900
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

நினைவுத் திருவிழா: டிசம்பர் 18

அருளாளர் ஆன்டோனியோ கிரஸ்ஸி, இத்தாலி நாட்டின் "புனிதர் பிலிப் நேரியின் சொற்பொழிவுக்கலை சபையைச்" (Oratory of Saint Philip Neri) சேர்ந்த ரோமன் கத்தோலிக்க குரு ஆவார். இயற்கையிலேயே பணிவுக்கும், பக்திக்கும் பிரபலமான கிராஸ்ஸி, அன்னை கன்னி மரியாளின் தீவிர பக்தராவார். அத்துடன், இத்தாலியின் "அன்கோனா" (Ancona) மாகாணத்திலுள்ள "லொரேட்டோ" (Loreto) எனும் மலை வாசஸ்தலத்திலுள்ள "லொரேட்டோ அன்னை பேராலய திருத்தலத்தின்" (Basilica della Santa Casa) பக்தியிலும் தீவிரமாயிருந்தார். அங்கு வருடாவருடம் திருயாத்திரை செல்லும் வழக்கம் கொண்டவராயிருந்தார்.

இத்தாலியின் "ஃபெர்மோ" (Fermo) எனும் மாகாணத்தில் ஆலோசகராகவும், ஒப்புரவாளராகவும் பணியாற்றிய கிரஸ்ஸி, போரிடும் பிரிவினருக்கு இடையே மத்தியஸ்தராகவும் பணியாற்றினார். ஆனால் அவர், புனித பிலிப் நேரியின் சொற்பொழிவுக்கலை சபையின் சட்டதிட்டங்களில் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.

திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII), கி.பி. 1900ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 30ம் நாளன்று, இவரை முக்திப்பேறு பெற்றவராக உயர்த்தினார்.

"விசென்ஸோ கிரஸ்ஸி" (Vincenzo Grassi) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1592ம் ஆண்டு, நவம்பர் மாதம், 13ம் தேதியன்று, கௌரவமான பெற்றோருக்குப் பிறந்தார். இவருடைய பெற்றோர், இவருடைய சிறுவயதில் இவரை எளிய மற்றும் பயபக்தியுடையவராக வளர்த்தனர். இவருக்கு பத்து வயதாக இருந்தபோது அவரது தந்தை இறந்துவிட்டார். அதே நேரத்தில், அவரும் நீண்ட காலமாக நோயுற்றிருந்தார். அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, புனிதர் பிலிப் நேரியை அறிந்திருந்த குரு, "ரிக்கி" (Father Ricci) என்பவரின் வழிநடத்துதலின் கீழே தமது ஆன்மீக வாழ்க்கையை தொடங்கினார்.

புனித பேதுரு பள்ளியில் (Curate of Saint Peter) கல்வி கற்ற கிராஸ்ஸி, கூடுதல் படிப்புகளுக்காக எஸ். ஸ்பிரிடோ டீடி பேரி டெல்ல'ஆரேட்டோரியோ (Church of S. Spirito dei Padri dell'Oratorio) ஆலயத்திலும் சேர்ந்து கொண்டார். கி.பி. 1609ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 11ம் நாளன்று, "ஓரெடரியன்ஸ்" (Oratorians) சபையில் இணைந்ததன் பின்னர், "ஆன்டோனியோ" (Antonio) எனும் பெயரை ஏற்றுக்கொண்டார்.

கி.பி. 1617ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 17ம் தேதி, "சேன் மினியேட்டோ" ஆயர் (Bishop of San Miniato) "அலெஸ்ஸாண்ட்ரோ ஸ்ட்ரோஸ்ஸி" (Alessandro Strozzi) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். அவருடைய படிப்புகளின்போது, புனித நூல்களைப் (Sacred Scripture) பற்றியும், தூய தாமஸ் அக்வினாஸ் (Saint Thomas Aquinas) மற்றும் திருச்சபை தந்தையர் (Church Fathers) ஆகியோரைப் பற்றியும் அவர் கணிசமான அறிவைப் பெற்றார்.

தமது குருத்துவ பணிகளில், மறைக்கல்வி மற்றும் மறைப்பணிகள் பற்றிய பக்தியும் சிந்தனையும் கொண்டிருந்தார். மற்றும், சிறுவர்களை அருட்சாதனங்களை பெறுவதற்காக தயாரிப்பதற்கான பணிகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பாவமன்னிப்புக்கான ஒப்புரவுப் பணிகளிலும் பல மணி நேரங்களை செலவிட்ட அவர், ஒரு குருவின் பிரதான பணியான, தமது பங்கு மக்களை பாவமன்னிப்பு கேட்கவைப்பதில் உதவினார்.

போரிடும் பிரிவினருக்கு இடையே மத்தியஸ்தராக பணியாற்றி, நகரில் அமைதியும் சமாதானமும் நிலவ அவர் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் விதமாக, அவர்களுடைய மாநில ஆளுநர், கிரஸ்ஸியின் உருவாய் படத்தை நகரசபை அலுவலகத்தில் நிறுவினார். தொண்டுப் பணிகளில் அவரது பக்தியும் ஆர்வமும் எல்லையற்றிருந்தது. பங்கு மக்களிடம் கொடைகளை கேட்டு வாங்கிய கிரஸ்ஸி, ஏழை மக்களுக்கு அதனை வழங்கினார். இதுபோன்று பொதுமக்களிடம் கொடை வாங்குவதையும் அதனை ஏழை மக்களுக்கு வழங்குவதையும் அவரது சக குருக்களே விமர்சித்து குறை கூறினர். ஆனால், கிரஸ்ஸியோ, தமக்கு தெய்வீக பாதுகாவல் இருப்பதாகவும், தாம் அதன்மூலம் பணியாற்றுவதாகவும் கூறுவார்.

கி.பி. 1625ம் ஆண்டு, அவர் திருத்தந்தை "மூன்றாம் அர்பன்" (Pope Urban VIII) அவர்களின் ஜூபிலி விருப்பத்தை (Jubilee indulgence) பெறுவதற்காக ரோம் நகருக்கு புனித யாத்திரை சென்றார். இந்த திருயாத்திரையின்போது, பல்வேறு ஆலயங்களையும், தூய பிலிப் நேரியின் (Saint Philip Neri) வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட மற்ற பொது இடங்களையும் தரிசித்தார். அங்கே வழிகாட்டியாக பணியாற்றிய அருட்தந்தை "கன்சோலினி" (Father Consolini) என்பவர் மூலமாக, தூய பிலிப் நேரி பற்றின மேலும் அதிக தகவல்களை கற்றுக்கொண்டார். விரைவில் அவரது தனிப்பட்ட தூய்மை, விரைவில் திருத்தந்தை "மூன்றாம் அர்பன்" (Pope Urban VIII) அவர்களையும் மற்றும் அவரது ஆலோசகர்களை சென்றடையவே, மேலும் திருத்தந்தையின் மதிப்பை கிரஸ்ஸி வென்றார். "லொரேட்டோ" (Loreto) எனும் மலை நகரிலுள்ள "லொரேட்டோ அன்னை பேராலய திருத்தலத்துக்கு" (Basilica della Santa Casa) ஆண்டுதோறும் திருயாத்திரை சென்றார். அங்கே, ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு அதிசயம் நடைபெற்றது. கி.பி. 1621ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 4ம் தேதி, வழக்கம் போல திருயாத்திரை செஇன்றிருந்த கிரஸ்ஸியை ஒரு மின்னல் வெட்டி தாக்கியது. இதனால் மாய்க்க நிலை அடைந்த இவர், எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினார். ஆனால், அவரது ஆடைகள் எரிந்து போயின.

கி.பி. 1635ம் ஆண்டு, அவர் ஃபெர்மோ (Fermo) மாகாண "ஒரேட்டரியன்" (Oratorians) சபை குருக்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

கி.பி. 1671ம் ஆண்டு, கிரஸ்ஸி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதே ஆண்டு, டிசம்பர் மாதம், 13ம் தேதி, அவரது படுக்கையினருகே "ஃபெர்மோ பேராயர்" (Archbishop of Fermo) "ஜியனோட்டோ குவால்டேரியோ" (Giannotto Gualterio) உடனிருக்க, கிரஸ்ஸி மரணமடைந்தார்.

No comments:

Post a Comment