† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 15)
✠ புனிதர் வர்ஜீனியா சென்ச்சுரியோன் ப்ரேசெல்லி ✠
(St. Virginia Centurione Bracelli)
கைம்பெண், மறைப்பணியாளர்:
(Widow, Religious)
பிறப்பு: ஏப்ரல் 2, 1587
ஜெனோவா, சார்டினியா இராச்சியம்
(Genoa, Kingdom of Sardinia)
இறப்பு: டிசம்பர் 15, 1651 (வயது 64)
ஜெனோவா, சார்டினியா இராச்சியம்
(Genoa, Kingdom of Sardinia)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திப்பேறு பட்டம்: செப்டம்பர் 22, 1985
போப் ஜான் பால் II
(Pope John Paul II)
புனிதர் பட்டம்: மே 18, 2003
போப் ஜான் பால் II
(Pope John Paul II)
நினைவுத் திருநாள்: டிசம்பர் 15
பாதுகாவல்:
கல்வாரி மலையில் உள்ள அடைக்கல அன்னையின் சகோதரிகள்
(Sisters of Our Lady of Refuge in Mount Cavalry)
புனிதர் வர்ஜீனியா சென்ச்சுரியோன் ப்ரேசெல்லி , ஜெனோவாவைச் சேர்ந்த ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்கர் ஆவார். அவரது தந்தை ஜெனோ நகரின் "டோஜ்" (Doge of Genoa) எனப்படும் ஆட்சியாளராக இருந்தவராவார். திருமணமான இவரது கணவர், 1607ம் ஆண்டு, மரித்த காரணத்தால் விதவையான இவரது திருமண வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது.
ஜெனோவா நகர உன்னத குடும்பமொன்றில் பிறந்த வர்ஜீனியா சென்ச்சுரியோன், ஜெனோவாவின் "டோஜ்" (Doge of Genoa) எனப்படும் ஆட்சியாளரான "ஜியோர்ஜியோ செஞ்சுரியோன்" (Giorgio Centurione), "லீலியா ஸ்பினோலா" (Lelia Spinola) ஆகியோரின் மகள் ஆவார்.
நான்கு சுவர்களுக்குள் தனிமை வாழ்க்கை வாழ விரும்பிய இவர், திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார். தமது பதினைந்தாம் வயதிலேயே, கி.பி. 1602ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 10ம் தேதி, பணக்கார உன்னத குடும்பத்தைச் சேர்ந்த "கேஸ்பேர் கிரிமால்டி பிராசெல்லி" (Gaspare Grimaldi Bracelli) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு "லீலியா" (Lelia) மற்றும் "இசபெல்லா" (Isabella) எனும் இரண்டு மகள்கள் பிறந்தனர். மது அருந்துவதிலும், சூதாட்டத்திலும் காலம் கழித்த ஊதாரியான இவரது கணவர், கி.பி. 1607ம் ஆண்டு, ஜூன் மாதம், 13ம் தேதி, மரித்துப் போனார். தனது 20 வயதிலேயே விதவையான இவரது திருமண வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது. தனது தந்தையின் செல்வாக்கின் காரணமாக கொண்டுவரப்பட்ட மற்றொரு திருமண பந்தத்தை மறுத்த அவர், தூய்மையான வாழ்க்கை வாழ சபதம் எடுத்தார்.
கணவரின் மரணத்திற்குப் பிறகு அவர் தொண்டு பணிகளைத் தொடங்கி, ஏழைகளுக்கும் நோயுற்றவர்களுக்கும் உதவினார். தனது ஊரில் உள்ள வறுமையைத் தணிக்க அவர் "சென்டோ சிக்னோர் டெல்லா மிசரிகோர்டியா புரோட்டெட்ரிசி டீ போவேரி டி கெஸ் கிறிஸ்டோ" (Cento Signore della Misericordia Protettrici dei Poveri di Gesù Cristo) என்ற அடைக்கல மையத்தினை நிறுவினார். கி.பி. 1629-30 ஆண்டுகளில், பஞ்சம் மற்றும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களால் இந்த அடைக்கல மையம் விரைவில் நிரம்பியது. தஞ்சம் வந்த அனைவருக்கும் இடமளிப்பதற்காக, விரைவில் அவர் "மான்டே கல்வாரியோ கான்வென்ட்டை" (Monte Calvario Convent) வாடகைக்கு எடுக்க வேண்டியிருந்தது. கி.பி. 1635ம் ஆண்டு, 300 க்கும் மேற்பட்ட நோயாளிகளை பராமரித்து வந்த இந்த அடைக்கல மையம், அரசாங்கத்தினால் ஒரு மருத்துவமனையாக அங்கீகாரம் பெற்றது.
அவர், ஒரு தேவாலயத்தை கட்டி, அதனை அடைக்கல அன்னைக்கு (Our Lady of Refuge) அர்ப்பணித்தார். விரைவில் அவருடன் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண்கள், "கல்வாரி மலை அடைக்கல அன்னையின் சகோதரிகள்" (Sisters of Our Lady of Refuge in Mount Calvary) மற்றும் "கல்வாரி மலை அன்னையின் சகோதரியர்" (Daughters of Our Lady on Mount Calvary), எனும் இரண்டு சபைகளாக உருவாக்கப்பட்டனர்.
நடுத்தர மற்றும் உயர் வகுப்பினரிடமிருந்து வழங்கப்பட்ட நிதி குறைந்து வந்த காரணத்தால், இந்நிறுவனம் 1647ம் ஆண்டு, அதன் அரசாங்க அங்கீகாரத்தை இழந்தது.
தமது சபைகளின் நிர்வாகத்திலிருந்து ஓய்வு பெற்ற அவர், மற்றும் உடல் உழைப்பைச் செய்தார். மற்றும் மக்களிடம் கெஞ்சி யாசகம் பெற்று நன்கொடைகளை செத்தார். ஆனால் விரைவில் நிர்வாக கடமைகளுக்கு மீண்டும் அழைக்கப்பட்டார்.
வர்ஜீனியா, தனது வாழ்நாள் முழுவதையும் உன்னத வீடுகளுக்கு இடையில் சமாதானம் செய்பவராகவும், ஏழைகளுக்காக தனது பணியைத் தொடர்ந்தும் கழித்தார்.
வர்ஜீனியா, தனது வாழ்க்கையின் பிற்காலங்களில் இறை தரிசனங்களை பெறத் தொடங்கினார். கி.பி. 1651ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 15ம் நாளன்று, ஜெனோவாவில் இறந்தார். 2003ம் ஆண்டு, மே மாதம், 18ம் நாளன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment