(நவம்பர் 7)
✠ புனிதர் வில்லிப்ரார்ட் ✠
(St. Willibrord)
உட்ரெச்ட் ஆயர்:
(Bishop of Utrecht)
பிறப்பு: கி.பி. 658
நார்தும்ப்ரியா
(Northumbria)
இறப்பு: நவம்பர் 7, 739 (வயது 81)
எக்டேர்னாக், லக்ஸம்பர்க்
(Echternach, Luxembourg)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
முக்கிய திருத்தலம்:
எக்டேர்னாக் (Echternach)
நினைவுத் திருநாள்: நவம்பர் 7
பாதுகாவல்:
வலிப்பு, கால்-கை வலிப்பு நோய், லக்ஸம்பர்க் (Luxembourg), நெதர்லாந்து (Netherlands), உட்ரெச்ட் பேராயம் (Archdiocese of Utrecht)
புனிதர் வில்லிப்ரார்ட், நவீன நெதர்லாந்தின் “ஃபிரைசியன்ஸ்" (Frisians) இன மக்களின் அப்போஸ்தலர் எனப்படுபவரும், “நார்தும்ப்ரியன்” (Northumbrian) துறவு புனிதரும் ஆவார். இவர், “உட்ரெச்ட்” (Utrecht) மறை மாவட்டத்தின் முதல் ஆயர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை:
வில்லிப்ரார்ட்டின் தந்தை பெயர் “வில்கில்ஸ்” (Wilgils) ஆகும். இவர் புதிதாய் கிறிஸ்தவ மதத்தை தழுவியவர் ஆவார். இவர் தமது மகன் வில்லிப்ரார்டை உலக பந்தங்களிலிருந்து விடுவித்து, “ரிப்பொன்” (Ripon) எனும் இடத்திலுள்ள துறவு மடத்தில் இணைக்க விரும்பினார். புனித ஆண்ட்ரூவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, "வாக்குவன்மை" பற்றின இனச் சார்பற்ற சமூகத்தை (Oratory) நிறுவினார். (கி.பி. 1564ல், ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் சார்புநிலையற்ற அருட்பணியாளர்கள் ரோம் நகரில் கூடி, பிரசங்கம் மற்றும் பிரபலமான சேவைகளை வழங்கும் அமைப்பினைத் தொடங்கி, பிற நாடுகளிலும் பரவச் செய்தனர்.
வில்லிப்ரார்ட், அன்றைய “யார்க்” மறைமாவட்ட ஆயர் (Bishop of York) “புனித வில்ஃபிரிடின்” செல்வாக்கின் கீழ் வளர்ந்தார்.
பின்னர், இவர் பெனடிக்டைன் (Benedictines) துறவு மடத்தில் இணைந்தார். நெடுங்கால துறவு வாழ்வில், மறைபோதனையுடன் தவ வாழ்வு வாழ்ந்த வில்லிப்ரார்ட், தமது 81ம் வயதில் மரணமடைந்தார்.
No comments:
Post a Comment