Friday, November 29, 2019

† டுலூஸ் நகரின் புனிதர் சட்டுர்னின் † (நவம்பர் 29)


† இன்றைய புனிதர் †
(நவம்பர் 29)

✠ டுலூஸ் நகரின் புனிதர் சட்டுர்னின் ✠
(St. Saturnin of Toulouse)

கௌல் அப்போஸ்தலர்/ ஆயர்/ மறைசாட்சி:
(Apostle to the Gauls/ Bishop and Martyr)

பிறப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
பெட்ராஸ், கிரேக்கம்
(Patras, Greece)

இறப்பு: கி.பி. 257
டுலூஸ், கௌல், (தற்போதைய ஃபிரான்ஸ்)
(Toulouse, Gaul (Modern-day France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: நவம்பர் 29

பாதுகாவல்:
டுலூஸ், ஃபிரான்ஸ்
(Toulouse, France)

புனிதர் சட்டுர்னின், "டுலூஸ்" (Toulouse) பகுதியின் முதல் ஆயரும், பழங்கால ஐரோப்பாவின் பிராந்தியமான "கௌல்" (Gaul) என்னுமிடத்தின் அப்போஸ்தலர்களுள் ஒருவராக மதிக்கப்படுபவரும் ஆவார்.

(இப்பிராந்தியம், தற்கால ஃபிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்தின் தென் பிராந்தியம், ஜெர்மனியின் தென்மேற்குப் பிராந்தியம் மற்றும் இத்தாலியின் வட பிராந்தியங்களுடன் ஒத்துப்போவதாகும். கி.பி. 222ல், ஆல்ப்ஸ் மலைகளின் தென்பகுதி ரோமானியர்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அவர்கள் இப்பகுதியை "கிஸால்பின் கௌல்" (Cisalpine Gaul) என்று அழைத்தனர். ஆல்ப்ஸ் மலைகளின் வட பிராந்தியம், "ட்ரான்ஸல்பின் கௌல்" (Transalpine Gaul) என்று அழைக்கப்பட்டது. இப்பிராந்தியம் கி.பி. 58 மற்றும் 51ல் "ஜூலியஸ் சீசரால்" (Julius Caesar) எடுத்துக்கொள்ளப்பட்டது.)

அந்நாளில், கௌல் பிராந்திய பேரரசன் "டெசியஸ்" (Emperor Decius) என்பவன் கிறிஸ்தவ மக்களை துன்புறுத்தினான். அவனால் சிறு அளவிலான கிறிஸ்தவ சமூகத்தினரையே கலைக்க இயன்றது. கி.பி. 236 – 250 காலகட்டத்தில், திருத்தந்தை புனிதர் “ஃபபியானின்” (Pope St. Fabian) வழிகாட்டுதலின்படி கௌல் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்ட அப்போஸ்தலர்களுள் புனிதர் சட்டுர்னினும் ஒருவர் ஆவார்.

திருத்தந்தை புனிதர் ஃபபியான் ரோமிலிருந்து ஏழு ஆயர்களை மறைப்பரப்பு பணிக்காக கௌல் பிராந்தியத்துக்கு அனுப்பி வைத்தார்.

புனிதர் சட்டுர்னின் ஓர் சிறந்த மறைபரப்பு பணியாளர் ஆவார். இவர் தமது மறைபரப்பு பணியின்போது பலரை மனந்திருப்பி, திருமுழுக்குக் கொடுத்து பணியாற்றியுள்ளார். நற்செய்தியை பரப்புவதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டுள்ளார். கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தவர். இதனால் திருத்தந்தை ஃபபியான் இவரை தூலூஸ் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுத்தார். இவர் தூலூஸ் நகரின் "முதல் ஆயர்" என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

'பாகன்' என்றழைக்கப்படும் கிறிஸ்துவுக்கு எதிரான மத குருமார், சிலை வழிபாட்டுக்கு எதிரான இவரை கொலை செய்யும் தருணத்துக்காக காத்திருந்தனர். ஒருநாள் இவரைப் பிடித்து மரண தண்டனை அறிவித்தனர். இவரை ஒரு எருதின் கால்களில் கட்டி இழுத்துப் போனார்கள். அந்த எருது, அவரை கட்டப்பட்ட கயிறு அறுந்து போகும்வரை இழுத்துச் சென்றது. "பாம்ப்லோனா" (Pamplona) என்ற இடத்தில் இவர் மறைசாட்சியாக மரித்தார்.

No comments:

Post a Comment