Sunday, November 24, 2019

† புனிதர் ஃபிர்மினா † (நவம்பர் 24)


† இன்றைய புனிதர் †
(நவம்பர் 24)

✠ புனிதர் ஃபிர்மினா ✠
(St. Firmina)

மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: ----

இறப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டு

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்கிய திருத்தலம்:
அமெலியா பேராலயம்
(Amelia Cathedral)

நினைவுத் திருநாள்: நவம்பர் 24

பாதுகாவல்:
அமெலியா (Amelia), இத்தாலி (Italy), சிவிடவெச்சியா Civitavecchia

புனிதர் ஃபிர்மினா, இத்தாலியின் ரோமன் கத்தோலிக்க புனிதரும், கன்னியரும், மறைசாட்சியுமாவார்.

மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கூறப்படும் இவர், “டயக்லேஷியன்” (Diocletian) எனும் ரோமப் பேரரசனின் (Roman emperor) காலத்தில் துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். ஆனால் அவரைப் பற்றிய அனைத்து தகவல்களும் 6வது நூற்றாண்டுக்கு முன்பே எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் குறிப்பிலிருந்து வந்திருக்கின்றன. பின்னர் சில நேரங்களில் முரண்பாடான விவரங்களுடன் வாய்வழி பாரம்பரியம் இதைப் பயன்படுத்துகிறது.

ஃபிர்மினா ஒரு உயர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாவார். அவரது தந்தை “கல்பர்னியஸ்” (Calpurnius) ரோம அரசின் ஒரு உயர் அதிகாரியாவார். “ஒலிம்பியாடிஸ்” (Olympiadis) எனும் ஒரு ரோம உயர் அதிகாரி, ஃபிர்மினாவை அடைய முயற்ச்சித்தார். ஆனால், ஃபிர்மினா அவரை கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மனம் மாற வைத்தார். இதன் காரணமாக, பிறகு “ஒலிம்பியாடிஸ்” மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

பின்னர், மத்திய இத்தாலியின் பிராந்தியமான “நார்தும்ப்ரியா” (Umbria) எனுமிடத்தினருகேயுள்ள “அமேலியா” (Amelia) எனும் நகரில் தனிமையில் செப வாழ்வு வாழ ஃபிர்மினா சென்றார். அங்கே, அவர் “டயக்லேஷியனால்” (Diocletian) துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment