† இன்றைய புனிதர் †
(நவம்பர் 1)
✠ அருளாளர் ரூபர்ட் மேயர் ✠
(Blessed Rupert Mayer)
இயேசு சபை குரு/ மியூனிச் நகர அப்போஸ்தலர் :
(The Jesuit/ The Apostle of Munich)
பிறப்பு : ஜனவரி 23, 1876
ஸ்டட்கர்ட், ஜெர்மனி
(Stuttgart, Germany)
இறப்பு : நவம்பர் 1, 1945 (வயது 69)
மியூனிச், ஜெர்மனி
(Munich, Germany)
ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: மே 3, 1987
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)
நினைவுத் திருநாள்: நவம்பர் 1
அருளாளர் ரூபர்ட் மேயர், ஒரு ஜெர்மானிய இயேசு சபை குருவும், அந்நாளில் மியூனிச் நகரில் “நாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில்”, (Resistance to Nazism) கத்தோலிக்கம் சார்பாக போராடியவர்களில் மிக முக்கியமானவர் ஆவார்.
“ஸ்டட்கார்ட்” (Stuttgart) நகரில் பிறந்து வளர்ந்த இவர், தமது பெற்றோருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் ஒருவராவார்.
1894ம் ஆண்டு, தமது பள்ளிக் கல்வியை ஸ்டட்கர்டில் கற்று நிறைவு செய்தார். பின்னர், “ஃப்ரெய்பர்க்”, “ஸ்விட்சர்லாந்து”, “மியூனிச்” மற்றும் “டுபிங்கேன்” (Freiburg, Switzerland; Munich and Tübingen) ஆகிய இடங்களில் தத்துவயியல் மற்றும் இறையியல் பயின்றார். 1899ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், 1900ம் ஆண்டு, ஆஸ்திரியா (Austria) நாட்டின் “ஃபெல்ட்கிரிச்” (Feldkirch) எனுமிடத்திலுள்ள “இயேசு சபையில்” (Society of Jesus) இணைந்தார்.
1906ம் ஆண்டு முதல் ஜெர்மனி (Germany), ஸ்விட்சர்லாந்து (Switzerland) மற்றும் நெதர்லாந்து (Netherlands) ஆகிய நாடுகளுக்கு மக்கள் ஆணையராக சுற்றுப்பயணம் சென்றார்.
1914ம் ஆண்டு முதல் மேயர் முதலாம் உலகப் போரில் தன்னார்வ மதகுருவாக பணியாற்றினார். ஆரம்ப காலத்தில், இராணுவ மருத்துவமனையில் பணியாற்ற அமர்த்தப்பட்டார். ஆனால், இவர் எல்லையில் போர் புரியும் வீரர்களின் அருகே சேவை செய்ய விரும்பினார். அதன்காரணமாக, ஃபிரான்ஸ், போலந்து மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் போர் முனைகளுக்கு அனுப்பப்பட்டார். கத்தோலிக்கர் மற்றும் கத்தோலிக்கர் அல்லாத வீரர்களால் அவர் மிகவும் மதிக்கப்பட்டார். தமக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்வதில் இவர் வல்லவராய் திகழ்ந்தார். ரூபர்ட் மேயர், அனைவருக்கும் ஆறுதலாகவும், நம்பிக்கை அளிப்பவராகவும் திகழ்ந்தார்.
இவர் பல முறை போரில் ஈடுபட்திருந்த படை வீரர்களுக்கிடையே ஊர்ந்து சென்று அவர்களுடன் சம்பாசிப்பதிலும் அவர்களுக்கு ஆன்மீக ஊக்கமளிப்பதிலும் ஈடுபட்டிருந்தார். அவர் தமது உயிரை இதன்மூலம் பணயம் வைப்பதாக எச்சரிக்கப்பட்டும் எச்சரிக்கைகளை மீறினார். தமது உயிர், கடவுளின் கைகளிலேயே உள்ளது என்றார். தமது மறையுரைகளால் வீரர்களை ஈர்த்தார். இவர் தன்னுயிரை பணயம் வைத்து மற்றவர்களுக்கு பலமுறை வாழ்வளித்தார்.
“புருஷியா அரசாலும்” (Kingdom of Prussia), பின்னர், “ஜெர்மன் பேரரசாலும்” (German Empire), “ஜெர்மனி நாசிக்களாலும்” (Nazi Germany) உருவாக்கப்பட்ட (Iron Cross) எனும் இராணுவ பதக்கம், இவருடைய வீரதீர, மற்றும் போர்முனையில் இராணுவ வீரர்களுடன் பணியாற்றிய தைரியத்துக்காகவும் டிசம்பர் 1915ல் இவருக்கு வழங்கப்பட்டது. இப்பதக்கத்தை வென்ற முதல் மதகுரு இவரேயாவார்.
1916ம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஒரு கையெறிகுண்டு (Grenade) தாக்குதலில் சிக்கிய இவர் தமது இடது காலை இழந்தார். இடது காலை இழந்த இவர், சிகிச்சைக்காகவும், ஓய்வெடுக்கவும் மியூனிச் திரும்பினார்.
1945ம் ஆண்டு, நவம்பர் மாதம், முதல் தேதி, அனைத்து புனிதர்கள் நினைவுத் திருவிழாவன்று, மியூனிச்சில் உள்ள “தூய மைக்கேல்” (St. Michael's Church) ஆலயத்தில் திருப்பீடத்தின் முன் சிலுவையை நோக்கி காலை எட்டு மணி திருப்பலி நிறைவேற்றுகையில் இறைவனடி சேர்ந்தார். “புல்லாச்” (Pullach) நகரில் அடக்கம் செய்யப்பட்ட இவரது உடல், 1948ம் ஆண்டு, மியூனிச் நகரில் மறு அடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment