Wednesday, October 30, 2019

† புனிதர் அல்ஃபோன்ஸஸ் ரொட்ரிகஸ் † (அக்டோபர் 30)

இன்றைய புனிதர்
(அக்டோபர் 30)


புனிதர் அல்ஃபோன்ஸஸ் ரொட்ரிகஸ்
(St. Alphonsus Rodriguez)


ஸ்பேனிஷ் இயேசுசபை பொதுநிலை சகோதரர்:
(Spanish Jesuit Lay Brother)

பிறப்பு: ஜூலை 25, 1532
செகோவியா, ஸ்பெயின்
(Segovia, Spain)

இறப்பு: அக்டோபர் 31, 1617 (வயது 85)
பல்மா, மஜோர்கா, ஸ்பெயின்
(Palma, Majorca, Spain)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: கி.பி. 1825
திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ
(Pope Leo XII)

புனிதர் பட்டம்: செப்டம்பர் 1888
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

முக்கிய திருத்தலம்:
இயேசுசபை கல்லூரி, பல்மா, மஜோர்கா, ஸ்பெயின்
(Jesuit College, Palma, Majorca, Spain)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 30

புனிதர் அல்ஃபோன்ஸஸ் ரொட்ரிகஸ், ஒரு ஸ்பேனிஷ் இயேசுசபை பொதுநிலை சகோதரர்” (Spanish Jesuit Lay Brother) ஆவார். இவர், ஸ்பெயின் நாட்டின் செகொவியா” (Segovia) பிராந்தியத்தைச் சேர்ந்தவர்.

அல்ஃபோன்ஸஸ், ஒரு கம்பளி வியாபாரியின் மகன் ஆவார். ஒருமுறை, இயேசு சபையின் இணை நிறுவனரும், போதகர்களில் ஒருவரான புனிதர் பீட்டர் ஃபாபெர்” (St. Peter Faber) அந்நகரத்துக்கு போதனை செய்ய வந்திருந்தபோது, அல்ஃபோன்ஸஸின் குடும்பத்தினர் அவருக்கு விருந்தோம்பல் செய்தனர். மனம் மகிழ்ந்த பீட்டர் ஃபாபெர்”, அல்ஃபோன்ஸஸை புதுநன்மை வாங்க தயாரித்தார். அல்ஃபோன்ஸஸுக்கு பதினான்கு வயதாகையில், அவரது தந்தை மரித்துப் போனதால், இவர் தமது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக கல்வியை விட்டுவிட்டு, தந்தையின் கம்பளி வியாபாரத்தை கவனிக்கப் போனார்.

தமது இருபத்தாறு வயதினிலே, அவர் தமது சொந்த ஊரைச் சேர்ந்த மரியா ஸுவாரெஸ்” (María Suarez) என்ற பெண்ணை திருமணம் புரிந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவரது முப்பத்தொரு வயதினிலேயே மனைவியும் இரண்டு குழந்தைகளும் மரித்துப் போயினர். அதன்பிறகு பெரும் அவமானமுற்ற இவர், தம்மைச் சுற்றியிருந்த உலகத்திலிருந்து விலகி, தனிமையில் செப வாழ்வு வாழ்ந்தார். அவரது மூன்றாவது குழந்தையும் மரித்தபோது, முற்றிலும் மனம் சோர்ந்துபோன அல்ஃபோன்ஸஸின் மனம், ஆன்மீக துறவற சபைகளின்பால் திரும்பியது.

ஆரம்பத்தில், தமது பதினான்கு வயதில் தமக்கு புதுநன்மை வாங்க தயாரித்து உதவிய இயேசுசபை துறவி பீட்டர் ஃபாபெரைதொடர்பு கொண்டார். அவர்மூலம் இயேசுசபையில் சேர முயற்சித்தார். ஆனால், அவரது முழுமையற்ற கல்வியினால் அவரால் இயேசுசபையில் சேர்ந்து குருத்துவம் பெற இயலாமல் போனது. தமது 39 வயதில், “பார்சிலோனா” (Barcelona) கல்லூரியில் சேர்ந்து இடைவிட்டுப் போன கல்வியை பூர்த்தி செய்ய முயற்சித்தார். ஆனால் அதிலும் ஜெயிக்க இயலவில்லை. அவரது தவ வாழ்க்கை, அவரது உடல் ஆரோக்கியத்தை பாதித்தது.

கணிசமான கால் தாமதத்தின் பிறகு, கி.பி. 1571ம் ஆண்டு, ஜனவரி மாதம், 31ம் நாள், தமது நாற்பது வயதில், இவர் இயேசுசபை திருத்தொண்டராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். அக்காலத்தில், ஸ்பெயின் நாட்டில் தனித்துவ புகுநிலை பயிற்சி மடங்கள்” (Distinct Novitiates) இல்லாத காரணத்தால், “வலென்சியாஅல்லது காண்டியா” (Valencia or Gandia) எனும் இடங்களில் திருத்தொண்டராக பயிற்சி மேற்கொண்ட அல்ஃபோன்ஸஸ், பின்னர் மஜோர்கா” (Majorca) என்னுமிடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கே சுமார் நாற்பத்தாறு வருடங்கள் சுமை துாக்குபவராகவும், வாயில் காப்பவராகவும் தாழ்ச்சியுடன் பணி புரிந்தார்.

கல்லூரியின் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அங்கே வருகை தருபவர்களின் சுமைகளையும் தூக்கி உதவுவது அவரது பணியாக இருந்தது. வாயில் காப்போனாக, கல்லூரிக்கு வருகை தருபவர்களை வரவேற்று, அவர்கள் சந்திக்க வந்திருக்கும் தந்தையர் மற்றும் மாணவர்களிடம் அழைத்துச் செல்வது போன்றவை அவரது பணியாக இருந்தது. மற்றும், செய்திகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கொண்டு செல்வது, நோயாளிகளை கவனித்து சேவை செய்வது போன்ற பணிகளும் அவருடைய பணிகளாம். ஒவ்வொருமுறையும் வாயில் அழைப்பு மணி அடிக்கும்போதெல்லாம், ஆண்டவரே வெளியே இவருக்காக காத்திருப்பதாக இவர் எண்ணிக்கொள்வார் என்று இவர் கூறுவார்.

புகழ் பெற்ற இயேசுசபை குருக்களில் ஒருவரான புனிதர் பீட்டர் கிளாவர்” (St. Peter Claver) இவருடன் மஜார்கா கல்லூரியில் தங்கியிருந்தார். அவர்கூட தாம் தென் அமெரிக்க நாடுகளில் செய்யவிருக்கும் மறைப்பணிகளுக்காக அல்ஃபோன்ஸஸின் அறிவுரைகளை பெற்றதாக கூறுவர்.

புனிதர் அல்ஃபோன்ஸஸ் ரொட்ரிகஸ், பணிக்காலத்தில் தாமாக ஏற்றுக்கொண்ட பணிச்சுமைகளாலும், அவமானங்களாலும், அவரது உடல் தீராத பாதிப்புகளுக்குள்ளானது. தீராத மன உளைச்சல்களுக்கும் ஆளானார்.

அருட்சகோதரர் அல்ஃபோன்ஸஸ், தமது இறுதி நாட்களில் மிகவும் வலுவற்றுப் போனார். அவரது ஞாபகச் சக்தி தவறிப்போனது. அவர் மிகவும் விரும்பிய செபங்களைக் கூட மறந்துபோன அல்ஃபோன்ஸஸ், கி.பி. 1617ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 31ம் நாள் மரித்துப் போனார்.

No comments:

Post a Comment