† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 30)
✠ புனிதர் ஏஞ்செலோ ✠
(St. Angelo of Acri)
தென் இத்தாலியின் அப்போஸ்தலர்:
(Apostle
of South Italy)
பிறப்பு:
அக்டோபர் 19, 1669
அக்ரி, கலாப்ரியா, தென் இத்தாலி
(Acri,
Calabria, Southern Italy)
இறப்பு: அக்டோபர் 30, 1739
அக்ரி, கலாப்ரியா, தென் இத்தாலி
(Acri, Calabria, Southern Italy)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க
திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: டிசம்பர் 18,
1825
திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ
(Pope Leo XII)
புனிதர் பட்டம்: அக்டோபர் 15, 2017
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)
நினைவுத்
திருவிழா: அக்டோபர் 30
புனிதர் ஏஞ்செலோ, தமது நாற்பது வருட குருத்துவ வாழ்க்கையில், தமது ஓய்வற்ற
மறைபோதனைகளால், “கலாப்ரியா” (Calabria) மற்றும்
தென்
இத்தாலியின் (Southern Italy)
அப்போஸ்தலர் (Apostle) என அறியப்படும் கபுச்சின் (Capuchin) சபையைச் சேர்ந்த கத்தோலிக்க குரு ஆவார். நல்ல
மேய்ப்பனைப் போலவே, பாவிகளையும், ஏழைகளையும், மிகச் சிறியோரையும் தேடிச்செல்ல அவர் தயங்கியதே கிடையாது.
எப்போதும் தம்மையே வெளிப்படுத்தாமல், ஆண்டவரிடமிருந்து கிடைக்கும் நற்செய்திகளையே
அவர் பிறருக்கும் வெளிப்படுத்தினார்.
“லூக்கா அன்டோனியோ ஃபால்கொன்” (Luca
Antonio Falcone) எனும் இயற்பெயர் கொண்ட இப்புனிதர், 1669ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 19ம் தேதியன்று,
தென் இத்தாலியின் “ஓல்ட் கசலிச்சியோ” (Old Casalicchio) பிராந்தியத்தின்
அருகாமையிலுள்ள “சிலா” (Sila mountainous plateau) மழைப் தொடரிலுள்ள
அக்ரி (Acri) எனும் சிறு நகரின், ஒரு தாழ்ச்சியான
ஏழைத் தொழிலாளியின் மகனைப் பிறந்தார். இதில் எப்பொழுதும் பெருமிதம் அடைந்த அவர், பின்னர் ஒரு ரொட்டி சுட்டு
விற்கும் மற்றும் ஒரு ஆடு மேய்ப்பவரின் மகனாகவும் தனது உரையாடல்களில்
நினைவுகூருவார். அவர்
பிறந்த மறுநாளன்று, செயின்ட்
நிக்கோலஸின் (Church of St. Nicholas) தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.
ஒரு
வகையான ஆரம்பநிலை பள்ளி திறக்கப்பட்திருந்த
ஒரு அயலூரில்
படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்ட அவர், செயின்ட் நிக்கோலஸ் பங்கிலும் (Parish of
St. Nicholas)
மற்றும் கபுச்சின் துறவற சபையின் (Friary
Church of the Capuchins) தேவ அன்னை மரியாளின் (St. Mary of the Angels) தேவாலயத்திலும் அடிக்கடி கிறிஸ்து கோட்பாடுகளின் அடிப்படைகளை கற்றுக்கொண்டார்.
அவர் வளரும் பருவத்திலே, அவரது
தாய் மாமனும் கத்தோலிக்க குருவுமான “அருட்தந்தை டோமினிக்கோ எர்ரிகோ” (Fr. Domenico Errico) என்பவர், இவரது இளம் விதவைத்
தாயாருக்கு இவர் உதவுவார் என்ற நம்பிக்கையில், இவரை படிக்க வைத்தார்.
1689ம் ஆண்டு,
கபுச்சின் துறவியான “அன்டோனியோ” (Capuchin Antonio of Olivadi) என்பவரது
கவர்ச்சியான பிரசங்கத்தைக் கேட்ட
இருபது வயதான லூக்கா அன்டோனியோ, தமது
துறவு
வாழ்க்கையின் சுருக்கமான அனுபவத்தைத் தொடர்ந்து, கபுச்சின் சபையில்
அர்ப்பணிக்க எண்ணி இணைந்தார். ஆனால், இவ்விளைஞன் விரைவிலேயே தடைகளை சந்தித்தார்.
கபுச்சின் வாழ்க்கையின் எளிமைகளால் உற்சாகமற்று, இரண்டு முறை துறவற சீருடைகளை
கழற்றிவிட்டு, புகுமுக பயிற்சியை விட்டு
ஓடிப்போனார். அவருக்கு, கண்ணீருடன் நின்றிருந்த தமது விதவைத் தாயாரின் முகமே கண்களில்
நின்றது. ஆனால், மூன்றாம் முறை, கி.பி. 1690ம் ஆண்டு, நவம்பர்
மாதம் 12ம் தேதி முதல், கலாப்ரியா (Calabria)
பிராந்தியத்திலுள்ள “பெல்வேடர் மரிட்டிமோ” (Belvedere Marittimo) எனுமிடத்திலுள்ள
துறவு மடத்தில், ஏஞ்செலோ (Angelo of Acri) எனும் பெயருடன்
புகுமுக பயிற்சியை (Novitiate) தொடங்கினார்.
இந்த
நேரத்தில் கூட, இரண்டாவது
எண்ணங்களும் சோதனைகளும் குறைவாக இல்லை. ஆனால், “சகோதரர் பெர்னார்ட்” (Br. Bernard
of Corleone) என்பவரின் முக்திபேறு நிலைக்கான ஆய்வுப் பணிகள்
நடந்துகொண்டிருந்த அச்சமயத்தில், அவரது தீரங்களைப் பற்றி படிக்க நேர்ந்தது.
சகோதரர் ஏஞ்செலோ, தமது போராட்டத்தில் உதவி கேட்டு ஆண்டவரில் ஆழ்ந்த
ஜெபத்தை உயர்த்தினார். சகோதரர்
பெர்னார்டின் அடிச்சுவடிகளைப் பின்பற்றி, அவரைப் போலவே நர்டந்துகொள்ளுமாறு,
இவ்விளம் புகுமுக துறவி ஆண்டவரால் ஊக்குவிக்கப்பட்டார் என்றும், இதுவே எதிர்பார்க்கப்பட்ட சரியான அடையாளம் என்று ஆண்டவர்
கூறியதாகவும் கூறப்படுகிறது.
கி.பி. 1691ம் ஆண்டு, நவம்பர் மாதம், 12ம் நாளன்று, தமது சத்தியப்
பிரமாணங்களை ஏற்றுக்கொண்டார்.
ஏஞ்செலோ, பரிபூரண நற்செய்தி வழியில் தன்னை
அமைத்தார். அத்துடன், குருத்துவ அருட்பொழிவுக்காக தம்மைத் தயார்
படுத்தவும் தொடங்கினார். 1700ம் ஆண்டு, ஏப்ரல்
மாதம், 10ம் நாள், உயிர்த்த ஞாயிறன்று, “கஸ்சானோ ஆல்இயோனியோ
தேவாலயத்தில்” (Cathedral of Cassano all’Ionio) குருத்துவ
அருட்பொழிவு பெற்றார். பின்னர், அவர்
ஒரு பிரசங்கியாக தன்னை தயார்படுத்தும்படி கீழ்ப்படிதலைக் கேட்டுக்கொண்டார். கி.பி. 1702ம் ஆண்டு முதல் 1739ம் ஆண்டு, தாம்
மரிக்கும் வரை, கலாபிரியா (Calabria) பிரதேசம் முழுதும் மற்றும் மத்திய
இத்தாலியின் அநேக இடங்களுக்கும் ஓய்வொழிச்சலின்றி பயணங்கள் மேற்கொண்டு, தவக்கால
நற்செய்திகளையும் (Lenten Sermons), தியானங்களையும் (Retreats), பிரபல
மறைப்பணிகளையும் (Popular Missions) பிரசங்கித்தார்.
பிரசங்கப் பணிகளின் ஆரம்பம் மிகவும் மகிமையானதாகவோ,
போற்றத்தக்கதாகவோ
இருக்கவில்லை. “கொரிஜிலியானோ
கலாப்ரோ” (Corigliano Calabro) அருகே
“சான்
ஜியோர்ஜியோ அல்பானீஸின்” (San Giorgio Albanese) அவரது அறிமுக பிரசங்கம், ஒரு
உண்மையான தோல்வியாகவே அமைந்தது. தொடர்ச்சியான மூன்று மாலை நேரங்கள், அவர் வாசித்து, ஞாபகம் வைத்திருந்த உரைகளை நினைகூர முடியவில்லை. பிரசங்கத்தை
தொடர முடியாது என்பதை கண்டுகொண்ட அவர், வேறு வழியின்றி, ஏமாற்றத்துடன் திரும்பிச்
சென்றார்.
தமது அறையில், சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின்
திருச்சொரூபத்தின் முன்பு கண்ணீர் விட்டழுத ஏஞ்சலோ, மாற்றவியலாத ஒரு முடிவுக்கு
வந்தார். கிறிஸ்து நிர்வாணப்படுத்தப்பட்டு சிலுவையில் அறையப்பட்டதை மட்டுமே தாம்
பிரசங்கிக்கப் போவதாயும், தாய்மொழியில் மட்டுமே பிரசங்கிக்கப் போவதாயும்
முடிவெடுத்தார். பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின்படியே தாம் இனி படிப்படியாக
முன்னேறப்போவதாகவும் முடிவெடுத்தார். அவருடைய இதயம் வைராக்கியமும் பரிசுத்த ஆவிக்குரிய ஐக்கியமும் நிறைந்ததாக
இருந்தது. இதனால்தான்
அவர் வெற்றி பெற்றார், தங்களை தாங்களே சிந்தித்துக்கொண்டிருந்த
எதிர்ப்பை சந்தித்தபோதும், அறிவொளியின் அறிவையும் அடைந்தார்.
மக்களிடம் அவர்களின் பாவங்களை கருணையுள்ளத்துடன் கேட்டு,
அவர்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்காத மறைபோதகர், அறுவடையைப் பற்றின
சிந்தனையில்லாத விதைப்பவனைப் போன்றவர் ஆவார் என்பதனை ஏன்ஜெலோ நன்கு
உணர்ந்திருந்தார். பாவிகளிடம் அவர்களின்
பாவசங்கீர்த்தனங்களை மணிக்கணக்கில் கேட்பதில் அவர் என்றுமே
களைப்புற்றதேயில்லை. அவர்களை கருணையுடனும் அன்புடனும் கையாண்டார். அன்புடன் பேசியே
அவர்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். மிகக் கடினமான சூழ்நிலைகளைக் கூட
கருணையாலும் இரக்கத்தாலும் தீர்க்கப் முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கருணையும் இறை
இரக்கமுமே பாவிகளை மீண்டும் கடவுளிடம் கொண்டு செல்லும் மார்க்கம் என்பதனை
அறிந்திருந்தார். அது மட்டுமே அவர்களை பாவசங்கீர்த்தனம் என்ற பெயரில் அவர்களை
முழந்தாள்படியிட வைத்திருந்தது. ஆனால்
அவர் அவர்களுக்காக காத்திருக்கவில்லை; அநேக முறை கடவுளின் அன்பை அவர்
சமாதானத் தேவைக்காக பாவிகளைத் தேட தாமே முன்வந்தார். நோயாளிகளுக்கு அவர்கள்
கேட்காமலேயே
ஆன்மீக உதவிகளை செய்து கொடுத்தார். ஏழை எளியோர் மீது ஏஞ்செலோ கொண்டிருந்த
அன்பானது, அவர்களுக்கு துன்பங்கள்
வரும்போதும், அவர்களுக்கு அநீதிகள்
இழைக்கப்படும் போதும் பலமுறை, "சேன்செவேரினோ குடும்பங்களை" (Sanseverino families) உதவிக்கு அழைக்க தூண்டியிருக்கின்றன.
பல நூற்றாண்டுகளாக "அக்ரியின்" (Acri) ஒரு பெரிய பிரமுகர்கள், மக்களின் நியாயமான
கூற்றுக்களை செவி கொடுத்து வந்திருக்கின்றனர். அவர்களின் அடிப்படை உரிமைகளை மதிக்க
வேண்டும் என்பதிலும் கருத்தை இருந்திருக்கின்றனர்.
("சேன்செவேரினோ குடும்பங்கள்"
(Sanseverino families) என்பது, நேப்பில்ஸ் (Naples) இராச்சியத்திலும், இத்தாலி முழுவதிலும் மிகவும் புகழ்பெற்ற, வரலாற்று சிறப்புமிக்க மற்றும் சக்தி வாய்ந்த குடும்பங்களில்
ஒன்றாகும்).
எங்கெல்லாம் அவர் இறை இரக்கத்தை பிரசங்கிக்கிறாரோ, எங்கெல்லாம் பாவிகளுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்குகிறாரோ, அங்கெல்லாம் ஓரிரு அறிகுறிகளையாவது விட்டுச் செல்லாமல் இருந்ததில்லை. கல்வாரி காட்சிகளைக்
கொண்ட ஒரு படமும், துன்புற்று, தம்மைத் தாமே ஈந்த கடவுளின் அன்பின் உறுதியான நினைவூட்டல்களாக, வியாகுல அன்னை மரியாளின் திருச்சொரூபமும் விட்டுச் செல்லும் வழக்கம்
கொண்டிருந்தார்.
ஏஞ்செலோ கபுச்சின்
சபையின் மாகான தலைமை (Provincial Minister) அதிகார பதவிகளிலும் இருந்திருக்கிறார்.
அவர் துறவியர்களை ஒரு உண்மையான கபுச்சின் வாழ்க்கையை நினைவுபடுத்த தவறவில்லை. அவர்,
அவர்களுக்கு “கடின வாழ்க்கை” (Austerity), “எளிமை” (Simplicity), “அரசியலமைப்பு
மற்றும் விதிகளை சரியானபடி அனுசரித்தல்” (The exact observance of
the Constitutions and the Rule), “குற்றமற்ற வாழ்க்கை” (Innocence of life) மற்றும் “எல்லையற்ற தொண்டு” (Boundless
charity) ஆகிய ஐந்து விலைமதிப்பற்ற இரத்தினங்களை கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment