Sunday, October 27, 2019

† புனிதர் ஓட்ரன் † (அக்டோபர் 27)


இன்றைய புனிதர்
(அக்டோபர் 27)


புனிதர் ஓட்ரன்
(St. Odrán of Iona)


பிறப்பு: ஆறாம் நூற்றாண்டு
மீத், அயர்லாந்து
(County Meath, Ireland)

இறப்பு: கி.பி. 563
அயோனா, ஸ்காட்லாந்து
(Iona, Scotland)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
மரபுவழி திருச்சபை
(Orthodox Church)
ஆங்கிலிக்கன் மற்றும் பிற திருச்சபைகள்
(Anglican Church and other Churches)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 27

பாதுகாவல்:
வாட்டர்ஃபோர்ட், அயர்லாந்து, சில்வர்மைன் பங்கு, டிப்பெரேரி
(Waterford, Ireland; Silvermines parish, Tipperary)

புனிதர் ஓட்ரன் அல்லது ஓரன், பாரம்பரியங்களின்படி, "கொனாளி குல்பன்" (Conall Gulbán) சந்ததியரும், அயோனாவின் புனித கொலம்பா'வின் (Saint Columba) துணையும் ஆவார். அந்தத் தீவில் அடக்கம் செய்யப்பட்ட முதல் கிறிஸ்தவரும் இவரேயாவார்.

வாழ்க்கை :
புனித ஓட்ரன், அயர்லாந்தின் சில்வர்மைன்ஸ்” (Silvermines) பகுதியில் சுமார் நாற்பது வருடங்கள் வாழ்ந்திருந்தார். கி.பி. 520ம் ஆண்டில் ஒரு ஆலயத்தைக் கட்டினார். ஐரிஷ் பாரம்பரியங்களின்படி, ஓட்ரன் "மீத்" (Meath) என்ற இடத்தின் மடாதிபதியாகவும் இருந்திருக்கிரார். கி.பி. 563ம் ஆண்டில், “அயோனாவின் ஸ்காட்டிஷ்தீவிற்கு (Scottish island of Iona) “புனிதர் கொலம்பாவுடன்” (Saint Columba) பயணித்த பனிரெண்டு பேரில் இவரும் ஒருவராவார். சென்ற இடத்தில் ஓட்ரன் அங்கேயே மரித்துப்போனார். அங்கேயே அவர் அடக்கமும் செய்யப்பட்டார். ஓட்ரனின் ஆன்மாவானது வான் லோகம் எடுத்துச் செல்வதற்கு முன்னர், அவரது ஆன்மாவுக்காக துர்சக்திகளும் சம்மனசுக்களும் சண்டையிட்டுக்கொண்டதை புனிதர் கொலம்பா நேரில் பார்த்ததாக கூறுகின்றனர்.

ஓட்ரன் மரணம் பற்றிய ஒரு பிரபலமான புராணமும் உள்ளது :
புனிதர் கொலம்பா அயோனாவில் ஒரு ஆலயம் கட்டும் முயற்சியில் இருந்தார். அந்த ஆலயத்தின் அஸ்திவாரத்தில் உயிருள்ள ஒரு மனிதனைப் புதைத்தாலொழிய, ஆலயத்தின் அஸ்திவாரம் நிற்காது என்று தினமும் ஒரு அசரீரி ஒழித்துக்கொண்டே இருந்தது. அதற்கேற்ப, அங்கே பணி செய்யும் தொழிலாளர்கள் தினமும் காலையில் பணிக்கு வருகையில், முதல் நாள் செய்திருந்த பணிகள் சிதைந்து போயிருந்ததை கண்டனர். இதனால், ஓட்ரன் தானாக முன்வந்து, ஆலயத்தின் அஸ்திவாரத்தில் புதையுர ஒப்புக்கொண்டார். அதன்படி புதைக்கப்பட்ட ஓட்ரனின் மேலே கட்டுமான பணி தொடங்கியது. ஒருநாள், புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தலையைத் தூக்கிய ஓட்ரன், "நீங்களெல்லாம் நினைப்பது போல இங்கே நரகமும் இல்லை; சொர்க்கமும் இல்லை" என்றார். துணுக்குற்ற புனிதர் கொலம்பா, உடனே அவரை மேலே எடுத்து வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்தார் என்பர்.

அயோனா மாகாணத்திலுள்ள பழம்பெரும் ஆலயம் ஒன்று புனிதர் ஓட்ரனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதனருகேயுள்ள கல்லறை ஒன்றின் பெயர், ஓட்ரனின் கல்லறை (Reilig Odhráin) ஆகும்.

No comments:

Post a Comment