† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 18)
✠ புனிதர் லூக்கா ✠
(St. Luke)
திருத்தூதர், நற்செய்தியாளர், மறைசாட்சி
:
(Apostle, Evangelist, Martyr)
பிறப்பு
: ---
அந்தியோக்கியா, சிரியா, ரோமப்
பேரரசு
(Antioch, Syria, Roman Empire)
இறப்பு
: கி.பி. சுமார் 84 (வயது 84)
பியோஷியா
அருகே, கிரேக்கம்
(Near Boeotia, Greece)
ஏற்கும்
சமயம் :
ரோமன்
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு
மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
கிழக்கு
கத்தோலிக்க திருச்சபை
(Eastern Catholic Churches)
ஆங்கிலிக்கன்
ஒன்றியம்
(Anglican Communion)
ஓரியண்டல்
மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Churches)
லூதரனியம்
மற்றும் சில சீர்திருத்தத் திருச்சபைகள்
(Lutheran Church and some other Protestant
Churches)
முக்கிய
திருத்தலங்கள் :
பதுவை, இத்தாலி
(Padua, Italy)
நினைவுத்
திருவிழா : அக்டோபர் 18
பாதுகாவல்
:
கலைஞர்கள், மருத்துவர்கள், விவசாயிகள்,
அறுவை
சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் பலர்
குறிப்பிடத்தகுந்த
படைப்புகள் :
லூக்கா
நற்செய்தி
அப்போஸ்தலர்
பணி
நற்செய்தியாளரான
புனிதர் லூக்கா, ஒரு ஆதி கிறிஸ்தவ எழுத்தாளரும், திருச்சபை
தந்தையரும், புனித ஜெரோம் மற்றும் யோசிபஸின்'படி விவிலியத்தின் லூக்கா நற்செய்தி
மற்றும் அப்போஸ்தலர் பணி என்னும் நூல்களின் ஆசிரியரும் ஆவார். இவர் நான்கு
நற்செய்தியாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவரின் எழுத்து நடை, இவர்
நன்கு கற்றறிந்தவர் என்பதனை எடுத்தியம்புகின்றது.
அந்தியோக்கியா
நகரில் பிறந்து வாழ்ந்த இவர், தொழில்ரீதியாக ஒரு மருத்துவர் ஆவார்.
இவரைப்பற்றிய மிகப்பழைய குறிப்பு திருத்தூதர் பவுல் எழுதிய பிலமோன் வசனம் 24, கொலோசையர்
4:14 மற்றும்
திமொத்தேயு 4:11ல் காணக்கிடைக்கின்றது.
இவர்
இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் அல்ல. மாறாக அவரின் 70 சீடருள்
ஒருவராக இருக்கலாம் எனவும், குறிப்பாக உயிர்த்த இயேசுவோடு
எமாவுசுக்கு சென்ற இரு சீடர்களுள் ஒருவராக இருக்கலாம் எனவும் விவிலிய அறிஞர்கள்
கருதுகின்றனர்.
கலைஞராக
லூக்கா :
எட்டாம்
நூற்றாண்டில் தொடங்கப்பட்ட கிறிஸ்தவ பாரம்பரியம், லூக்காவை முதல் பிரபல ஓவியர் என்கிறது.
அவர் வரைந்த இறைவனின் தூய அன்னை மரியாளினதும் குழந்தை இயேசுவினதும் சித்திரங்கள்
அதி பிரசித்தி பெற்றவை. முக்கியமாக, தற்போது காணாமல் போன “கான்ஸ்டன்டினோபில்” (Constantinople) அருகேயுள்ள
"ஹோடேகெட்ரியா" (Hodegetria image) அன்னையின் சித்திரம் பிரபலமானது.
பதினொன்றாம் நூற்றாண்டில், அவரது கைத்திறமைகளுக்காக பல
சித்திரங்கள் புனிதத்துவம் பெற்றன. எடுத்துக்காட்டாக,
"செஸ்டோசோவா'வின்
"கருப்பு மடோன்னா" (Black Madonna of
Częstochowa and Our Lady of Vladimir) சித்திரம் முக்கியமானதாகும். இவர், புனிதர்கள் பவுல் மற்றும் பேதுரு
ஆகியோரின் சித்திரங்களையும் வரைந்ததாக கூறப்படுவதுண்டு. அக்காலத்தில், ஒரு
நற்செய்தி புத்தகத்தை நுண்ணிய முழு சுழற்சியுடன் விளக்கி எழுதியிருந்ததாகவும்
கூறப்படுகின்றது.
அப்போஸ்தலர்
புனிதர் பவுலின் சீடராகிய இவர், பிறகு பவுல் மறைசாட்சியாக மரிக்கும்வரை
அவரைப் பின்பற்றுபவராக இருந்தார்.
திருமணமாகாத, குழந்தைகளில்லாத, தூய
ஆவியால் நிரப்பப்பட்டிருந்த புனித லூக்கா, கடைசிவரை ஆண்டவருக்கு சேவை செய்வதிலேயே
தமது ஆயுளைக் கழித்தார்.
இவர்
தனது 84ம்
வயதில் மரித்தார் என்பர். இவரது மீ பொருட்கள் கான்ஸ்டண்டினோப்பிளுக்கு கி.பி 357ம் ஆண்டு,
கொண்டுவரப்பட்டன.
இவரது
நினைவுத் திருவிழாநாள் அக்டோபர் மாதம், 18ம் தேதி ஆகும்.
No comments:
Post a Comment