Friday, October 18, 2019

† அல்கான்டரா நகர் புனிதர் பீட்டர் † (அக்டோபர் 18)


இன்றைய புனிதர்
(அக்டோபர் 18)


✠ அல்கான்ரா நகர் புனிதர் பீட்டர்
(St. Peter of Alcantara)

துறவி/ ஆத்ம பலம் கொண்டவர் :
(Friar, Mystic)

பிறப்பு: கி.பி. 1499
அல்கான்ரா, ஸ்பெயின்
(Alcántara, Spain)

இறந்து: அக்டோபர் 18, 1562 (வயது 62-63)
அரினாஸ் டி சான் பெட்ரோ, ஸ்பெயின்
(Arenas de San Pedro, Spain)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 18, 1622
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
(Pope Gregory XV)

புனிதர் பட்டம் : ஏப்ரல் 28, 1669
திருத்தந்தை ஒன்பதாம் கிளெமெண்ட்
(Pope Clement IX)

நினைவுத் திருநாள் : அக்டோபர் 18

பாதுகாவல் :
பிரேசில் (Brazil), நற்கருணை ஆராதனை (Eucharistic Adoration), எக்ஸ்ட்ரீமுதுரா (Extremadura), பாகில் (Pakil), லாகுனா (Laguna) மற்றும் இரவு காவலர்கள் (Night Watchmen)

அல்கான்ரா நகர் புனிதர் பீட்டர், ஒரு ஸ்பேனிஷ் ஃபிரான்சிஸ்கன் துறவி (Spanish Franciscan Friar) ஆவார்.

புனிதர் பீட்டர், ஸ்பெயின் (Spain) நாட்டின், அல்கான்ரா (Alcántara) நகரில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார், அல்கான்ரா (Alcántara) நகரின் ஆளுநர் (Governor of Alcántara) பதவி வகித்த “பீட்டர் கராவிட்டா” (Peter Garavita) ஆவார். இவரது தாயார், “சனபியாவின்” (Noble Family of Sanabia) உன்னத குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். தமது பதினாறு வயதில் “சலமான்கா பல்கலை கழகத்திற்கு” (University in Salamanca) கல்வி கற்க அனுப்பப்பட்ட பீட்டர், சிறிது காலத்திலேயே ஃபிரான்சிஸ்கன் (Franciscans) சபையில் சேர முடிவு செய்தார்.

1515ம் ஆண்டு, வீடு திரும்பிய பீட்டர், “எக்ஸ்ட்ரீமடுரா” (Extremadura) நகரிலுள்ள ஃபிரான்சிஸ்கன் சபையின் கண்டிப்பான கவனிப்புகளுள்ள (Stricter Observance) மடத்தின் ஒரு துறவியாக வீடு திரும்பினார். இருபத்தி இரண்டு வயதில் அவர் “படஜோஸ்” (Badajoz) நகரில், ஃபிரான்சிஸ்கன் சபையின் மற்றுமொரு கண்டிப்புள்ள (Stricter Observance) ஒரு புதிய சமூகம் நிறுவ அனுப்பப்பட்டார். 1524ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்ட அவர், அடுத்த வருடம் ரோப்ரேடில்லோ (Robredillo), பழைய கஸ்டிலில் (Old Castile) உள்ள புனித மரியாளின் ஏஞ்சல்ஸின் துறவு மடத்தின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். சில வருடங்கள் கழித்து அவர் பல வெற்றிகளுடன் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.

ஏழைகளுக்கு பிரசங்கிப்பதற்கு அவர் விரும்பினார். அவருடைய பிரசங்கங்கள், பெரும்பாலும் தீர்க்கதரிசிகளிடமிருந்தும், அறிவுப் பண்புடைய புத்தகங்களிலிருந்தும் எடுத்துக்கொள்ளப்பட்டனவாகும்.

1538ம் ஆண்டு, "எட்ஸ்ட்ரீமடுரா" (Estremadura) நகரின் "சேன் கேபிரியல்" (St Gabriel) நகரிலுள்ள ஃபிரான்சிஸ்கன் மாகான தலைவராக பணியமர்த்தப்பட்டார். ஆனால், துறவியரிடையே கண்டிப்பான சட்டதிட்டங்களை அமல்படுத்தும் அவரது முயற்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியபோது, அவர் தலைமை பதவியிலிருந்து விலகினார். அவர் அவிலா நகர் யோவானுடன் (John of Avila) போர்ச்சுகலின் அர்ராபிடா (Mountains of Arrábida) மலைகளில் ஓய்வுபெற சென்றார். விரைவிலேயே அநேகம் பிற துறவியரும் அவருடன் இணைந்துகொள்ள வந்தனர். சிறு சிறு சமூகங்கள் உருவாக்கப்பட்டன. “பர்ரேய்ரோ” (Barreiro) நகரிலுள்ள “பல்ஹாயிஸ்” (friary of Palhais) துறவு மடத்தின் பாதுகாவலராகவும், புகுமுக துறவியரின் தலைவராகவும் தேர்வானார். 1560ம் ஆண்டு, இந்த சமூகங்கள் அர்ராபிடா” (Province of Arrábida) மாகாணத்தில் நிறுவப்பட்டன.

1553ம் ஆண்டு, ஸ்பெயின் திரும்பிய அவர், மேலும் இரண்டு வருடங்களை தனிமையில் செலவிட்டார். பின்னர், ரோம் நகருக்கு வெறும்காலுடன் பயணித்த அவர், ஸ்பெயின் நாட்டில், மரபுசாராரின் தலைமையின் அதிகார வரம்பின் கீழே, ஏழை எளிய துறவியருக்கான மடங்களை நிறுவுவதற்கான திருத்தந்தை மூன்றாம் ஜூலியசின் (Pope Julius III) அனுமதி பெற்று வந்தார். “பெட்ரோசா” (Pedrosa), “பிளாசென்சியா” (Plasencia) மற்றும் அநேக இடங்களில் துறவு மடங்கள் நிறுவப்பட்டன.

ஏழைகளுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக ஸ்பெயின் நாடு முழுதும் பயணித்த பீட்டர், மிகவும் கடின நோன்புகளையும் எளிமையையும் கடைபிடித்தார். புனிதர் தெரேசா (St. Teresa), புனிதர் பிரான்சிஸ் டி சலேஸ் (St. Francis de Sales) மற்றும் டொமினிக்கன் துறவியான “வணக்கத்துக்குரிய கிரடாவின் லூயிஸ்” (The Venerable Louis of Granada) ஆகியோரால் ஒரு தலைசிறந்த படைப்பாகக் கருதப்பட்ட பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மீதான ஒரு புத்தகத்தை அவர் எழுதினார்.

செபத்தின்போதும், ஆழ்ந்த சிந்தனைகளின்போதும், அவர் முகத்தில் எப்போதும் ஒரு மகிழ்ச்சி கரைபுரள்வதை காணமுடிந்தது. மரணப்படுக்கையில் இருந்த அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கப்பட்டபோது, “சிலுவையில் தொங்கிய என் இயேசு கிறிஸ்து தாகமாயிருந்தார்...” என்று கூறியவாறு அதனை மறுத்தார். 1562ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 18ம் தேதி, "அர்நேஸ்" (Arenas) நகரிலுள்ள மடாலயத்தில் முழங்கால்படியிட்டு செபித்துக்கொண்டிருந்த பீட்டர் மரித்துப்போனார். (இது, தற்போதைய "ஓல்ட் கேஸ்டில்" (Old Castile), "அவிலா மாகாணத்திலுள்ள" (Province of Ávila) "அரினாஸ் டி சான் பெட்ரோ" (Arenas de San Pedro) எனும் இடமாகும்.)

எப்போதும் சிறிது நேரமே உறங்கும் வழக்கமுள்ள பீட்டர், உட்கார்ந்தவாறே உறங்குவார் என்று கூறப்படுகிறது. அவரது சகோதர துறவியர் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் விழித்துக்கொண்டிருந்த காரணத்தால், அவர் இரவு காவலாளர்களின் பாதுகாவலர் ஆவார்.

No comments:

Post a Comment