† இன்றைய
புனிதர் †
(அக்டோபர்
16)
✠ புனிதர்
ஹெட்விக் ✠
(St. Hedwig of
Silesia)
கைம்பெண், துறவி:
(Widow & Hermit)
பிறப்பு:
கி.பி. 1174
அந்தேக்ஸ், பவேரியா, தூய ரோமப் பேரரசு
(Andechs, Bavaria, Holy
Roman Empire)
இறப்பு:
அக்டோபர் 15, 1243 (வயது 68–69)
ட்ர்செப்னிகா
துறவுமடம், சிலேசியா, போலந்து
(Trzebnica Abbey, Silesia,
Poland)
ஏற்கும்
சமயம்:
ரோமன்
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
புனிதர்
பட்டம்: மார்ச் 26, 1267
திருத்தந்தை
நான்காம் கிளமெண்ட்
(Pope Clement IV)
முக்கிய
திருத்தலங்கள்:
அன்டேக்ஸ்
துறவு மடம், மற்றும் தூய ஹெட்விக்’கின் ஆலயம், பெர்லின்
(Andechs Abbey and St.
Hedwig's Cathedral in Berlin)
பாதுகாவல்:
அன்டேக்ஸ்
துறவு மடம் (Andechs Abbey), பிராண்டன்பேர்க் (Brandenburg), பெர்லின் (Berlin),
போலந்து
(Poland), சிலேசியா (Silesia),
க்ராகோவ்
(Kraków), வ்ரோக்ளா (Wrocław),
ட்ருஸ்பினிகா
(Trzebnica), “கோர்லிட்ஸ்” ரோமன் கத்தோலிக்க
மறைமாவட்டம் (Görlitz, the Roman Catholic Diocese), அனாதைகள் (Orphans)
நினைவுத்
திருநாள்: அக்டோபர் 16
புனிதர்
“சிலேசியாவின் ஹெட்விக்” (Saint Hedwig of Silesia) என்றும், “அன்டேக்ஸின் ஹெட்விக்” (Saint Hedwig of Andechs) என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு “சிலேசிய சீமாட்டி அல்லது பிரபுவின்
மனைவியும்” (Duchess of Silesia), “போலந்தின்
சீமாட்டியும்” (Duchess of Poland) ஆவார்.
ஹெட்விக், “அன்டேக்ஸ்” நாட்டின் பிரபுவான “நான்காம் பெர்தோல்ட்” (Berthold IV of
Andechs), மற்றும் அவரது இரண்டாம் மனைவியான “அக்னேஸ்” (Agnes of Wettin) ஆகியோருக்குப் பிறந்தவர் ஆவார்.
தமது
பன்னிரண்டு வயதிலேயே சிலேசியா நாட்டை சேர்ந்த “முதலாம் ஹென்றி” (Henry I the Bearded) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்த இவர், ஏழு குழந்தைகளுக்கு தாயானார். இவர் தனது குடும்பத்தில்
மகிழ்ச்சியாக வாழ்ந்தார். ஹென்றி டிரேப்னிட்ஸ் (Trebnitz)
என்ற
ஊரில் சிஸ்டர்சியன் (Cistersien) துறவற மடத்திற்கென்று, துறவற இல்லம் ஒன்றை கட்டினார். அம்மடத்தில் துறவற
இல்லத்திற்கான, மருத்துவமனை ஒன்றையும் கட்டினார்.
கி.பி. 1238ம் ஆண்டு, ஹென்றி இறந்து போனார். இதனால் அதே ஆண்டு, தமது சகோதரியாகிய “கேட்ரூட்” (Gertrude) தலைமை தாங்கி நடத்திவந்த துறவற மடத்தில், சத்தியப் பிரமாணம் ஏற்காத, துறவற சீருடையணிந்த, பொதுநிலை அருட்சகோதரியாக (Lay Sister)
சேர்ந்த
ஹெட்விக், செபதவ வாழ்வில் ஈடுபட்டார். அப்போது தன்
பிள்ளைகளிடையே பிரச்சினைகள் எழுந்தது. இவரின் ஒரே பிள்ளையான “இரண்டாம் ஹென்றி” (Henry II the
Pious) மங்கோலியர்களால்
கொல்லப்பட்டார். ஹெட்விக் தன் பிள்ளைகளுக்காக இடைவிடாமல் செபித்து செபத்தினாலேயே
மங்கோலியர்களை வென்றார்.
ஹெட்விக் எப்போதுமே ஏழைகளுக்கும் கைம்பெண்களுக்கும்
அனாதைகளுக்கும் உதவி வந்திருக்கின்றார். நோயுற்றோர்க்காகவும் தொழு
நோயாளிகளுக்காகவும் பல்வேறு மருத்துவமனைகளை நிறுவினார். தனக்கு சொந்தமான நிலங்களை
திருச்சபைக்கு வழங்கினார். தனது கணவர் உதவியுடன் ஏழைகளுக்கு ஏராளமான் உதவிகளை
செய்தார். இவர் குளிர்காலத்தில் கூட பனிகட்டிகள் கொட்டியபோதும், காலணிகள்
அணியாமலே பனியில் நடந்து சென்று செபம் செய்து, மறைப்பணியாற்றி
ஏழைகளுக்கு உதவியுள்ளார். கி.பி.
1243ம்
ஆண்டு, அக்டோபர்
மாதம், 15ம்
தேதி மரித்த இவரது உடல், இவரது கணவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே “ட்ரேஸ்பெனிகா” (Trzebnica Abbey) துறவு மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலின்
மிச்சங்கள் (Relic) ஜெர்மனியின்
தலைநகர் பெர்லினில் உள்ள “தூய ஹெட்விக்”
(St. Hedwig's Cathedral in Berlin) பேராலயத்தில்
வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment