† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 15)
✠ புனிதர் ஓரேலியா ✠
(St. Aurelia of Strasbourg)
கன்னியர்:
(Virgin)
நினைவுத் திருநாள்: அக்டோபர் 15
புனிதர்
ஓரேலியா, கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த புனிதராவார்.
இவரது கல்லறையானது, ஃபிரான்ஸ் (France) நாட்டின் “கிரேண்ட் எஸ்ட்” (Grand Est region) பிராந்தியத்தின்
தலைநகரான “ஸ்ட்ராஸ்பர்க்” (Strasbourg) நகரில் உள்ளது.
இது, மத்திய காலத்தில்
ஒரு பிரபலமான வழிபாட்டு மையமாக மாறியது.
புராணத்தின்படி, ரோமானிய
பிரிட்டனில் (Roman Britain) இருந்து பதினோராயிரம் கன்னிப் பெண்களுடன் மேற்கு ஜெர்மனியின் (Western
Germany) “நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா” (North Rhine-Westphalia) மாநிலத்தின் “கொலோன்” (Cologne) நகர் சென்ற
புனிதர் ஊர்சுலாவுடன் (Saint Ursula) இவரும்
இணைந்து சென்றார் என்றும், உள்ளூர் ஆயரான “அகுல்லின்” (Aquilin) அவர்களை
மதிப்புடன் வரவேற்றார் என்றும் கூறப்படுகின்றனர். அங்கிருந்து அவர்கள்,
ஸ்விட்சர்லாந்து (Switzerland) நாட்டின் “பாஸல்” (Basel) நகர் நோக்கி
பயணித்தனர். “பாஸல்” நகரிலிருந்து, “ஸ்ட்ராஸ்பர்க்” நகர் நோக்கி
தமது பயணத்தை தொடங்கினர். அங்கே, தீவிர காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட புனிதர் ஓரேலியா, சில
நாட்களிலேயே மரித்துப் போனார். அவரை கவனித்துக்கொள்ள மூன்று கன்னியரை விட்டுச்
சென்றனர். திருச்சபையில், காய்ச்சல் நோய்களுக்கு எதிராக அவரை நோக்கி
செபிக்கப்படுகிறது. அவருடைய மூன்று தோழிகளும் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாழ்ந்து
அங்கேயே
புதைக்கப்பட்டார்கள்.
சில
நூற்றாண்டுகளுக்குப் பின் அவர்களது
கல்லறை திறக்கப்பட்டபோது, அவர்களின் பெயர்களைக் கொண்ட தலைப்புகளுடன், அவர்களது உடல்கள் முற்றிலும் கெட்டுப்போகாமல் அப்படியே இருந்தன. “ஸ்ட்ராஸ்பர்க்” மறைமாவட்டத்தின் (Diocese of
Strasbourg)
தற்போதைய வரலாற்றுப் புத்தகத்தில் இந்த புராணம் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புராணங்களின் நம்பகத் தன்மையைக் கேள்வி கேட்கும்
“கிரேண்டிடியர்” (Grandidier) என்பவர், ஸ்ட்ராஸ்பர்க்கில் (Strasbourg) ஏற்கனவே புனித ஓரேலியாவின் வழிபாட்டு முறை மிகவும்
பிரபலமாக இருந்ததை 9ம் நூற்றாண்டில் கவனித்து
வந்திருந்தார்.
ஸ்ட்ராஸ்பர்க்கில்
உள்ள தூய ஓரேலியின் தேவாலயம், அவரது கல்லறை அமைந்துள்ள நிலவரை மீது கட்டப்பட்டுள்ளது.
1524ம் ஆண்டு, “மார்ட்டின் பூசர்” (Martin Bucer) எனும் எதிர்
திருச்சபையைச் சேர்ந்த சீர்திருத்தவாதி ஒருவர், தாம் போதகராக நியமிக்கப்பட்ட உடனேயே,
தோட்டக்காரர்களின் சங்க
உறுப்பினர்களை அழைத்து வந்து, கல்லறையை
திறந்து எலும்புகளை தரையில் விரிக்க தூண்டினார். கல்லறை விக்கிரக ஆராதனை பொருளாக மாற்றப்பட்டுள்ளது
என்றும் நியாயப்படுத்தினார்.
No comments:
Post a Comment