Sunday, October 13, 2019

† அருளாளர் மேரீ பௌஸ்செபின் † (அக்டோபர் 14)

இன்றைய புனிதர்
(அக்டோபர் 14)


அருளாளர் மேரீ பௌஸ்செபின்
(Blessed Marie Poussepin)

நிறுவனர்/ பொதுநிலை சகோதரி:
(Founder and Lay Sister)

பிறப்பு: அக்டோபர் 14, 1653
டோர்டன், பிரான்ஸ்
(Dourdan, France)

இறப்பு: ஜனவரி 24, 1744 (வயது 90)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: 1994
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(John Paul II)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 14

அருளாளர் மேரீ பௌஸ்செபின், ஒரு ஃபிரெஞ்ச் டொமினிக்கன் பொதுநிலை சகோதரியும்,கருணை முன்னிலைப்படுத்தும் டொமினிக்கன் சகோதரியர்” (Dominican Sisters of Charity of the Presentation) என்னும் அருட்கன்னியர்க்கான ஆன்மீக சபையை தோற்றுவித்தவரும் ஆவார்.

டோர்டன் (Dourdan) நகரின் உள்ளூர் அறக்கட்டளை அமைப்பின் பொருளாளராக பணியாற்றிய அரசு அதிகாரியான “கிளாட் பௌஸ்செபின்” (Claude Poussepin) என்பவரின் மகளான மேரீ, தமது சிறுவயது காலம் முழுதும் நோயுற்ற தமது தாயாரை கவனிப்பதிலேயே செலவிட்டார்.

தாயாரின் மரணத்தின் பிறகு, தமது 22 வயதில், கன்னியர்க்கான ஒரு தியான சபையில் சேர விரும்பினார். ஆனால், அந்நேரம் நோயில் வீழ்ந்த தகப்பனாரை கவனிக்க வீட்டில் இருக்கவேண்டிய நிலையிலிருந்த மேரீ, தமது விருப்பத்தை தள்ளி வைத்தார். அதே சமயத்தில் அவர், ஏழைகளையும், நோயுற்றோரையும் கவனித்து சேவை செய்யும் சுருசுருப்பான டொமினிக்கன் துறவியானார். 1690ம் ஆண்டு, தமது தந்தையார் மரித்ததும், தமது குடும்ப வியாபாரங்களை தமது சகோதரரிடம் ஒப்படைத்தார். “ஆங்கர்வில்” (Angerville) நகரில் “கருணையின் டொமினிக்கன் சகோதரியர்” சபையின் கிளை ஒன்றினை நிறுவும் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

உள்ளூர் ஆயரின் விருப்பமின்மை காரணமாக, சபையினர் உடனடியாக டொமினிகன் சபையுடன் முறையாக இணைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஜாகோபைன்ஸ்” (Jacobines) என அறியப்பட்டது. “ஜாகோபைன்ஸ்” தலைவராக, அவர் ஃபிரான்சின் கிராமப்புறங்களில் ஆரம்பப் பள்ளிகளைத் திறந்துவைத்ததுடன், சீர்திருத்த சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தையும் ஆரம்பித்தார்.

டொமினிகன் சபையின் முறையான ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்த போதிலும், அது அவரது வாழ்நாளில் கிட்டவில்லை. 1744ம் ஆண்டு, அவர் தமது மரணப்படுக்கையில் இருக்கும்போது, அவர் இந்த பிரச்சினையைத் தொடர்ந்தால், ஜேக்கப்பைன்கள் (Jacobines) பெற்றுள்ள சிறிய அங்கீகாரத்தையும் திரும்பப் பெற நேரிடும் என்று மிரட்டப்பட்டார்.

இறுதியாக, 1897ம் ஆண்டில், ஜேக்கப்பைன்கள் (Jacobines) முறையாக அங்கீகரிக்கப்பட்டு, அவர்களது சபை, அதிகாரப்பூர்வமாக டொமினிகன் சகோதரிகள் என்ற பெயரிடப்பட்டது.

No comments:

Post a Comment