Thursday, October 31, 2019

† St. Wolfgang of Regensburg † (October 31)



† Saint of the Day †
(October 31)


St. Wolfgang of Regensburg

The Almoner:

Born: 934 AD

Died: October 31, 994

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church

Canonized: October 8, 1051
Pope Leo IX

Feast: October 31

Patronage:
Apoplexy; Carpenters and Wood Carvers; Paralysis; Regensburg, Germany; Stomach Diseases; Strokes

Saint Wolfgang of Regensburg was bishop of Regensburg in Bavaria from Christmas 972 until his death. He is a saint of the Roman Catholic and Eastern Orthodox churches. He is regarded as one of the three great German saints of the 10th century, the other two being Saint Ulrich and Saint Conrad of Constance.

We recognize at once that a St. Wolfgang must have been the patron saint of that great musician Wolfgang Amadeus Mozart. Not too many Americans, even those of German descent, have chosen to give their sons such a lupine baptismal name. Yet St. Wolfgang of Regensburg remains one of the truly great saints of medieval Germany, and the model of a reforming Bishop.

Wolfgang, the son of a nobleman, attended school first at the Benedictine monastery school of Reichenau, and then at the cathedral school of Wuerzburg. Because of his talent, he was then invited to teach in the cathedral school at Trier. Although still layman, he fell under the spell of the great local Benedictine monastery of St. Maximin and became a willing assistant to the reforming bishop of Trier.

After the death of this bishop, Wolfgang himself joined the Benedictines, although not at Trier but at Einsiedeln in Switzerland. Here he was ordained a priest in 968 by St. Ulrich, bishop of Augsburg.

Soon after ordination Father Wolfgang was sent to present Hungary to preach the gospel to the pagan Magyars, who had only lately settled there. He did his best, but without any visible success. In 972 he was brought back to Germany and named bishop of Regensburg. (The church authorities, in promoting his bishop after his Hungarian “failure” must have thought no less of him on account of his missionary unsuccess. For his part, the failure was probably an incentive to greater humility and stronger effort as he took over his episcopal duties.)

It seems that the diocese of Regensburg at that point needed a thorough reform, and Bishop Wolfgang was the man to accomplish it.

What do we mean by necessary reform? Well, we are human beings, and it is all too easy for us to become relaxed in Christian practices through one bad influence or another. Then it is hard to return to the straight and narrow path. Catholics begin to go downhill particularly when the members of their religious orders enter a decline, for the religious orders are normally a major inspiration to high standards. Wolfgang, therefore, focused his efforts particularly on jacking up two local monasteries of monks, that of St. Emmeram and that of Altach. There were also two monasteries of nuns that had become slipshod in observing the rule that was theoretically their key to holiness. These nuns he also brought back to good discipline.

Wolfgang’s method of reform was interesting. No doubt he lowered the boom when that was necessary. But he seems to have depended most on shaming people into better ways by a good example. When he became bishop he did not assume the princely ways of his fellow bishops in the Empire (although like them, he was a civil as well as it church ruler). No, he continued to wear his monk’s habit and to follow the monastic austerities, and he saw to it that his household was free of worldly lifestyle. Likewise, he corrected the nuns of the two rundown monasteries, less, it seems, by scolding them than by founding at Regensburg a convent that excelled in a good example through its careful observance of the rule.

We may be sure, nevertheless, that Bishop Wolfgang gained enemies among the monks and nuns that he felt obliged to correct, and among the clerics and laypeople to whom he laid down the law. No matter how highly placed a corrector, people who have fallen into waywardness of teaching or behavior simply do not like to be corrected. We have seen examples of this all-too-human trait in our own day. I am sure that Wolfgang felt pain at their resistance. Maybe that was why, at one point, he fled his diocese and tried to set up as a hermit on the shores of what is now called Lake St. Wolfgang. His escape didn’t succeed. A hunter discovered him and brought him back home to face once more the unpopularity that is the occupational hazard of a bishop or any superior who has the duty of enforcing the law.

But opposition to him was in the short run. In the long run, the religious and laity of the diocese of Regensburg came to appreciate the idealism and courage and holiness of their bishop. When he died in 994 while on a trip down the Danube, his body was brought back and enshrined in Regensburg. It quickly became a center of pilgrimage, and in 1054 the pope canonized St. Wolfgang as a model of the bishop who is ready to correct as well as direct the flock entrusted to him.
~ Father Robert F. McNamara

† ரெகென்ஸ்பர்க் நகர் புனிதர் வோல்ஃப்காங்க் † (அக்டோபர் 31)

இன்றைய புனிதர்
(அக்டோபர் 31)


ரெகென்ஸ்பர்க் நகர் புனிதர் வோல்ஃப்காங்க்
(St. Wolfgang of Regensburg)


தர்மம் செய்பவர் & ரேகன்ஸ்பர்க் நகர ஆயர்:
(The Almoner & Bishop of Regensburg)

பிறப்பு: கி.பி. 934
ஃபுல்லிங்கன், ரியுட்லின்ஜென், ஜெர்மனி
(Pfullingen, Reutlingen, Germany)

இறப்பு: அக்டோபர் 31, 994
புப்பிங், இஃபெர்டிங், ஆஸ்திரியா
(Pupping, Eferding. Austria)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: அக்டோபர் 8, 1051
திருத்தந்தை ஒன்பதாம் லியோ
(Pope Leo IX)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 31

பாதுகாவல்:
மூளை இரத்தக் கசிவு (Apoplexy), தச்சர்கள் மற்றும் மர வண்டிகள், பக்கவாதம், ரெகென்ஸ்பர்க் (Regensburg), ஜெர்மனி (Germany), வயிறு நோய்கள், பக்கவாதம்

புனிதர் வோல்ஃப்காங்க், கி.பி. 972ம் வருட கிறிஸ்துமஸ் தினம் தொடங்கி, மரிக்கும்வரை பவேரியாவிலுள்ள” (Bavaria) “ரேகன்ஸ்பர்க்” (Regensburg) மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றியவர் ஆவார். இவர், ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இவரை புனிதராக ஏற்கின்றன. பத்தாம் நூற்றாண்டில் ஜெர்மனியின் நன்கு அறியப்பட்ட மூன்று புனிதர்களில் இவர் ஒருவராவார்.

புனிதர் வோல்ஃப்காங்க், தென்மேற்கு ஜெர்மனியின் ஸ்வாபியா” (Swabia) அமைப்பு குடும்பமொன்றினைச் சார்ந்தவர் ஆவார். ரெய்செனவ்” (Reichenau Abbey) துறவற மடத்திற்கு சொந்தமான ஒரு பள்ளியில் தனது கல்வி கற்றார். இவர் இங்கே கற்கும்போதுதான், “ஹென்றி” (Henry of Babenberg) என்பவரின் நண்பரானார்.

பின்னர், 956ம் ஆண்டு, “டிரையர்” (Trier) உயர்மறைமாவட்ட பேராயராக ஹென்றி நியமிக்கப்பட்டார். பேராயர் ஹென்றியின் அழைப்பை ஏற்று டிரையரிலுள்ள பேராலயப் பள்ளிக்கு கி.பி. 964ம் ஆண்டு, ஆசிரியராக பணியாற்றும் பொறுப்பை ஏற்றார். அத்துடன், பல எதிர்ப்புகளுக்கிடையே உயர்மறைமாவட்டத்தின் சீர்திருத்தத்திற்காகவும் உழைத்தார். அச்சமயத்தில்தான், தானும் குருவாக வேண்டுமென்று விருப்பம் கொண்டார்.

கி.பி. 964ம் ஆண்டு, பேராயர் ஹென்றியின் மரணத்தின் பின்னர், வோல்ஃப்காங்க் ஸ்விட்சர்லாந்து” (Switzerland) நாட்டின் மரியா எய்ன்ஸியேடெல்ன்” (Abbey of Maria Einsiedeln) துறவு மடத்திலுள்ள பெனடிக்டைன்” (Benedictine order) சபையில் இணைந்தார். அங்கு தனது விருப்பத்தை தெரிவித்து வார்த்தைப்பாடுகளை பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து ஆக்ஸ்பர்க் ஆயர்” (Bishop of Augsburg) புனிதர் உல்ரிச்” (St. Ulrich) அவர்களால் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

கி.பி. 955ம் ஆண்டு, நடந்த லெக்ஃபீல்ட் போரில்” (Battle of Lechfeld) மோசமான தோல்வியை தழுவிய ஹங்கேரியர்கள்” (Hungarians), பண்டைய ரோமப் பேரரசின் பிராந்தியமான பன்னோனியாவில்” (Pannonia) குடியேறியிருந்தனர். வெகு காலம் வரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறாத இவர்கள், பேரரசுக்கு ஒரு நிலையான அச்சுறுத்தலாகவே இருந்தனர். தூய ரோமப் பேரரசின் (Holy Roman Empire) பேரரசர் முதலாம் ஒட்டோவின்” (Emperor Otto I) விருப்பத்தின்படி, ஆயர் உல்ரிச்” (St. Ulrich) வோல்ஃப்காங்க்கை ஹன்கேரியர்களிடையே சென்று அவர்களுடைய மனமாற்றத்திற்காக மறை போதிக்க கேட்டுக்கொண்டார். ஹன்கேரியர்களிடையே செல்வது ஆபத்தான காரியம் என்று தெரிந்திருந்தும், வோல்ஃப்காங்கின் மறைபோதக திறமையின் மீது நம்பிக்கை வைத்திருந்தார். வோல்ஃப்காங்க், “பன்னோனியா” (Pannonia) சென்று, ஹங்கேரியர்களிடையே மறை போதனை செய்து அவர்களை கிறிஸ்தவர்களாக மனம் மாற்றி சாதனை புரிந்தார்.

கி.பி. 972ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 23ம் தேதி, “ரேகன்ஸ்பர்க்ஆயர், மிக்கேல்” (Bishop Michael of Regensburg) மரணமடைந்தார். பேரரசரிடமிருந்து ஆயர் நியமனம் பெற்ற வோல்ஃப்காங்க், கி.பி. 972ம் ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆயராக பதவியேற்றார்.

இவர் ஏறக்குறைய 22 ஆண்டுகள் ரேகன்ஸ்பர்க் மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தார். தன்னுடைய பதவி காலத்தில் மறைமாவட்டத்திற்கு ஏராளமான பணிகளை செய்தார். பல துறவற இல்லங்களை கட்டினார். பெண் துறவிகள் கற்பதற்கென்று சில துறவற மடப்பள்ளிகளையும் கட்டினார். ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் தேவையான வீடுகளையும், மருத்துவமனைகளையும் கட்டினார். இவர் வாழும்போதே மக்கள் இவரை புனிதர் என்று அழைத்தனர்.

வாழ்க்கையின் இறுதி காலத்தில் ஆயர் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற இவர், வெளிப்படையான ஒரு அரசியல் மோதல் காரணத்தால், “அப்பர் ஆஸ்திரியாவின்” (Upper Austria) பொழுதுபோக்கு பகுதியான சல்ஸ்கம்மெர்கட்” (Salzkammergut) எனுமிடத்திலுள்ள வொல்ப்காங்” (Lake Wolfgang) எரிப்பகுதியில் தனிமைத் துறவியாய்ப் போனார். ஒரு வேட்டைக்காரரால் கண்டுபிடிக்கப்பட்ட இவர், மீண்டும் ரேகன்ஸ்பர்க் நகருக்கு கொண்டுவரப்பட்டார்.

ஒருமுறை, “லோவர் ஆஸ்திரியாவின்” (Lower Austri) “மெல்க்” (Melk) மாவட்டத்திலுள்ள போச்லர்ம்” (Pöchlarn) எனுமிடத்திற்கு டனுப்அல்லது வோல்கா” (Danube or Volga River) நதியில் பயணிக்கையில் நோய்வாய்ப்பட்டு, “புப்பிங்” (Pupping) எனும் கிராமத்தில் வீழ்ந்தார். அவரது வேண்டுகோளின்படி செயிண்ட் ஒத்மார் சிற்றாலயம்” (Chapel of Saint Othmar) கொண்டுவரப்பட்ட புனிதர் வோல்ஃப்காங்க், அங்கேயே மரித்தார்.

இவரது உடல் ரேகன்ஸ்பர்க்கில் உள்ள புனிதர் எம்மரம்” (Crypt of St. Emmeram) நிலவறையில் அடக்கம் செய்யப்பட்டது.

† Blessed Thomas of Florence † (October 31)



† Saint of the Day †
(October 31)


Blessed Thomas of Florence

Religious:

Born: 1370 AD
Florence, Republic of Florence

Died: October 31, 1447 (Aged 77)
Rieti, Papal States

Venerated in: Roman Catholic Church

Beatified: 1771 AD
Pope Clement XIV

Feast: October 31

Patronage: Butchers, Penitents, Missionaries

Blessed Thomas of Florence or “Tommaso Bellacci” was an Italian Roman Catholic professed member of the Third Order of Saint Francis. Bellacci was a butcher and became a religious after turning his life around from one of sin to one of penance and servitude to God. Bellacci travelled across the Middle East and the Italian peninsula to preach and administer to people despite not being an ordained priest.

The rite of beatification was celebrated in 1771.

Life :
Thomas of Florence was born in Florence in 1370 as the son of a butcher. His parents came from Castello di Linari in Val d'Elsa. He was born in a house that was situated on the Ponte alle Grazie. He led a wild and dissolute life as an adolescent that parents warned their sons to keep their distance from him. He became a butcher like his father. He got into a lot of trouble on various occasions during his childhood.

Thomas was accused of having committed a serious crime in 1400 that he in fact did not do and so he wandered the streets of Florence until he met a priest who listened to Thomas and took him in and helped clear his name. The incident shocked him so much - coupled with his appreciation of the priest - that he shed his life of sin and decided to live a life of total penance and service to God. He joined the Third Order of Saint Francis in Fiesole in 1405 as a religious rather than a priest and became noted for keeping vigils and fasting. He also became a novice master despite not being a priest.

He founded friaries in Corscia Pope Martin V called him to preach in the northern cities against the "Fraticelli" who were a group of heretical Franciscans and was also made Vicar General at the pope's behest; he and Alberto da Sarteano in 1438 were later sent to the Middle East to cities such as Damascus and Cairo in order to promote the reunification of the Eastern and Western Churches when he was over 70. Alberto had to leave due for back home due to his ill health which left Thomas on his own.

He attempted to travel to Ethiopia but the Turks captured him three times. The Florentine merchants helped to secure his release the first two times while he was later imprisoned for his faith and work the third time and expected that he would be killed though Pope Eugene IV helped secure his release. He returned home in 1444 and spent his time in a convent in Abruzzo until 1446. He was known for his diet of water and vegetables.

Thomas died in Rieti while on a visit to Rome to visit the pontiff. He planned to ask him for permission to return to the Orient. His remains were relocated in 2006.

† ஃபுளோரன்ஸ் நகர் அருளாளர் தாமஸ் † (அக்டோபர் 31)

இன்றைய புனிதர்
(அக்டோபர் 31)


ஃபுளோரன்ஸ் நகர் அருளாளர் தாமஸ்
(Blessed Thomas of Florence)

மறைப்பணியாளர்:
(Religious)

பிறப்பு: கி.பி. 1370
ஃபுளோரன்ஸ், ஃபுளோரன்ஸ் குடியரசு
(Florence, Republic of Florence)

இறப்பு: அக்டோபர் 31, 1447 (வயது 77)
ரியேட்டி, திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rieti, Papal States)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: கி.பி. 1771
திருத்தந்தை பதினைந்தாம் கிளமென்ட்
(Pope Clement XIV)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 31

பாதுகாவல்:
மாமிசம் விற்பவர்கள் (Butchers),பாவ மன்னிப்புக் கோருபவர்கள் (Penitents), மறைப்பணியாளர்கள் (Missionaries)

அருளாளர் தாமஸ், இத்தாலி நாட்டின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவரும், புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை (Third Order of Saint Francis) சபையின் ஒப்புக்கொள்ளப்பட்ட உறுப்பினரும் (Professed Member) ஆவார். இவர், “டொம்மேசோ பெல்லாக்கி” (Tommaso Bellacci) எனும் பெயரிலும் அறியப்படுகிறார். ஆரம்பத்தில், மாமிசம் விற்கும் வியாபாரம் செய்துவந்த இவர், தாம் செய்த ஒரு பாவத்திற்காக மனம் வருந்தி, தமது வாழ்க்கையையே திருப்பி மறைப்பணியாளராக ஆனார்.

தாமஸ், தாம் ஒரு குருத்துவம் பெற்ற குருவாக இல்லாவிடினும், மத்திய கிழக்கு மற்றும் இத்தாலிய தீபகற்பம் முழுவதும் பயணம் செய்து, மக்களுக்குப் பயிற்சியளிக்கவும், மறையுரைகளாற்றவும் செய்தார்.

தாமஸ், கி.பி. 1370ம் ஆண்டு, மேற்கு மத்திய இத்தாலியின் (Western Central Italy) “டுஸ்கனி” (Tuscany) மாகாணத்தின் தலைநகரான ஃபுளோரன்ஸ் (Florence) நகரின் மாமிச வியாபாரி ஒருவரின் மகனாகப் பிறந்தார். தமது இளமையில் ஒரு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட அவரிடமிருந்து தமது மகன்களை தூர விலகி இருக்குமாறு அக்கம்பக்கத்திலுள்ள பெற்றோர் எச்சரிக்கை செய்வது வழக்கமாயிருந்தது. அவர், தமது தந்தையைப் போலவே தாமும் ஒரு இறைச்சி வியாபாரி ஆனார். அவர் தனது குழந்தை பருவத்திலேயே பல்வேறு சந்தர்ப்பங்களில் நிறைய பிரச்சனைகளைச் சந்தித்தார்.

கி.பி. 1400ம் ஆண்டு, ஒரு தீவிரமான குற்றத்தை செய்ததாக தாமஸ் குற்றம் சாட்டப்பட்டார். உண்மையில் அவர் அக்குற்றத்தைச் செய்திருக்கவில்லை. ஆகவே அவர் ஃபுளோரன்ஸ் நகர தெருக்களில் அலைந்து திரிந்தார். பின்னர், ஒரு கத்தோலிக்க குருவானவர் தாமசை சந்தித்தார். தாமஸ் கூறுவனவற்றை கருணையுடன் செவிமடுத்தார். பின்னர் தாமசின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்க உதவினார். நடந்த அந்த சம்பவம் அவரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. குருவின் பாராட்டுதல்களால் கட்டுண்ட அவர், தமது பாவங்கள் நிறைந்த வாழ்க்கையை கொட்டித் தீர்த்தார். கடவுளுக்க சேவை செய்யக்கூடிய முழு தவ வாழ்க்கை வாழ தீர்மானித்தார். கி.பி. 1405ம் ஆண்டு, ஃபுளோரன்ஸ் பெருநகரிலுள்ள சிறிய நகரான “ஃபியசோல்” (Fiesole) நகரிலுள்ள புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபையில், குருத்துவம் பெறாத மறைப்பணியாளராக இணைந்தார். விழித்திருத்தல், தவம் மற்றும் உபவாசம் ஆகியவற்றில் குறிக்கப்படுமளவு முன்னேறினார். குருத்துவ அருட்பொழிவு பெற்ற குருவாக இல்லாதிருந்தும் புகுமுக துறவியரின் (Novice Master) தலைவரானார்.

தாமஸ், ஃபிரான்ஸ் (France) நாட்டின் கோர்சிகா தீவிலுள்ள (Island of Corsica) “கோர்சியா” (Corscia) நகரில் பல்வேறு துறவு மடங்களை நிறுவினார். இவரை அழைத்த திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் (Pope Martin V), ஃபிரான்சிஸ்கன் துறவியர்க்கெதிராக பிரச்சாரம் செய்யும் (Group of Heretical Franciscans) குழுவினருக்கு எதிராய் பிரச்சாரம் செய்ய அறிவுறுத்தினார். திருத்தந்தையின் கட்டளைப்படி அவரை தலைமை குருவாக (Vicar General) நியமித்தார். கி.பி. 1438ம் வருடம், திருத்தந்தை இவரையும், அருளாளர் “ஆல்பெர்ட் பெர்டினி” (Blessed Albert Berdini of Sarteano) ஆகிய இருவரையும் மத்திய கிழக்கு நாடுகளின் (Middle East) “டமாஸ்கஸ்” (Damascus) மற்றும் “கெய்ரோ” (Cairo) ஆகிய நகரங்களுக்கு, கிழக்கு மற்றும் மேற்கத்திய திருச்சபைகளை (Eastern and Western Churches) ஒருங்கிணைப்பதை ஊக்குவிப்பதற்காக அனுப்பினார். அப்போது, தாமசின் வயது எழுபது.

அவர் எத்தியோப்பியாவுக்குச் (Ethiopia) பயணம் செல்ல முயன்றார், ஆனால் துருக்கியர்கள் (Turks) அவரை மூன்று முறையும் பிடித்துச் சென்றனர். ஃ ப்ளோரன்ஸ் வியாபாரிகள் இரண்டு தடவை அவரை விடுவிக்க உதவினார்கள். மூன்றாம் முறை, அவர் துருக்கியர்களால் கொல்லப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டதால், திருத்தந்தை நான்காம் யூஜின் (Pope Eugene IV) தலையிட்டு அவரை விடுவித்தார். கி.பி. 1444ம் ஆண்டு நாடு திரும்பிய தாமஸ், தெற்கு இத்தாலியின் “அப்ருஸ்ஸோ” (Abruzzo) பிராந்தியத்திலுள்ள பள்ளியில் கி.பி. 1446ம் ஆண்டு வரை தங்கினார். தாமஸ் வெறும் தண்ணீரையும் காய்கறிகளையுமே தமது உணவாக எடுத்துக்கொண்டார்.

ரோம் நகருக்கு திருத்தந்தையை காணச் செல்லும் வழியில், மத்திய இத்தாலியின் “லாஸியோ” (Lazio) பிராந்தியத்தின் “ரியேட்டி” (Rieti) எனும் நகரில் மரித்தார்.

Wednesday, October 30, 2019

† St. Alphonsus Rodriguez † (October 30)


† Saint of the Day †
(October 30)


 St. Alphonsus Rodriguez 

Confessor:

Born: July 25, 1532
Segovia, Spain

Died: October 31, 1617 (Aged 85)
Palma, Majorca, Spain

Venerated in:
Catholic Church
(Society of Jesus)

Beatified: 1825 AD
Pope Leo XII

Canonized: September 1888
Pope Leo XIII

Major shrine:
Jesuit College, Palma, Majorca, Spain

Feast: October 30

St. Alfonso Rodriguez was born at Segovia, Spain in 1531, son of a pious wool merchant. He received the good influence of the first Jesuits to come to Spain, in particular Blessed Peter Faber, who lived for a time with his family, and later that of St. Francisco de Villanueva. After his father’s death Alfonso took over the family business. However, because of his lack of aptitude, the business entered into bankruptcy. At around the same time, he lost his wife and three children, as well as his mother.

“In failure,” he said afterwards, “I saw the majesty of God. I recognized the wickedness of my life. I had not been concerned about God, and in that state, I was on the verge of my eternal perdition. I saw the sublime grandeur of God from the dust of my misery. I imagined myself as a second David, and the Miserere was the expression of my state of soul.”

At age 40, he entered the Society of Jesus as a lay brother, and after a six month novitiate he was sent to the Jesuit College of Mount Zion on the Island of Palma de Majorca to be the doorkeeper at the adjoining monastery. He was the doorkeeper there for 45 years. His saintly behavior led many to hold him in high regard and numerous people began to ask for his spiritual advice. St. Alfonso had a special gift for spiritual conversation. His superior affirmed that no spiritual treatise produced as much spiritual good as contact with that lay brother. He always responded to every request in his large correspondence. His fame spread and he became known as the Doctor of Majorca.

By bearing the enormous and multiple spiritual difficulties he experienced in his own life, he learned the spiritual science. Thanks to his good response to grace, he said, “insofar as the consciousness of my own debility became keen in me, I felt the grandeur of the Lord.”

For three days before his death, after his last Communion, St. Alfonso remained in ecstasy. “What happiness!” exclaimed an eyewitness. It was just a fragment of his internal joy. Witnesses decided to call for a painter to draw a faithful picture of him. He died October 31, 1617.

Comments:
This is a magnificent life that has three very important points:
First, in an extremely humble position, St. Alfonso did an enormous good for the island of Majorca, Spain and the entire world. He was the doorkeeper of a monastery on the island of Palma de Majorca. In that time, communication from the island to the continent was difficult. It was much more isolated than it is today. There he spent 45 years of his existence; nothing less than 45 years! He had the most humble position possible. Notwithstanding, the exquisite perfume of Our Lord Jesus Christ exhaling from his soul spread out over the island of Palma de Majorca, Spain and the entire world.

The figure of that old doorkeeper, amiable, hospitable, always accessible to everyone, available for every consultation, made the poor chair of this doorkeeper a venerable throne of wisdom. Everyone would go there to see him, to listen to him. This is the magnificence appropriate to even a very humble life when such a life is dedicated to the service of Our Lord and the Holy Catholic Church.

Why? Because both sanctity and wisdom have an incomparable power of irradiation. A saint does not need to be in a strategic place. Wherever he is, he attracts admiration and affection. It is enough for a man to have a sanctity that is “victa et not picta” – lived and not faked.

Second, the way St. Alfonso was called to contemplate and serve God Our Lord is magnificent. It is a way that speaks deeply to my soul. He considered the grandeur of God, infinitely great, infinitely majestic, infinitely wise, transcendent, excellent, sublime, radiant, absolute, and mysterious. When we consider everything in this world that we can see and analyze, we realize that all is insufficient and futile unless it is a reflection of God. If it were not for God, everything is empty, faded and tasteless.

Since we have faith, we know that everything in creation, beyond its material being, is a symbol, a veil that permits us to see the Absolute Being - Perfect, Eternal, Most Wise, and Sublime - reflected in the visible reality. Only in considering that superior reality can our weary eyes marvel and rest. Finally we found something that is worthy to see, contemplate and love, that rouses our complete dedication. To the measure that we consider that He is not like us, that He is perfect and we are just dust, mere creatures conceived in original sin, then our existence acquires meaning.

We see that St. Alfonso Rodriguez made this consideration and insofar as he ascended in his spiritual life, he repented of his sins and increasingly desired to know more about the grandeur of God. Today many persons are afraid to think about the grandeur of God. It is not my case, I feel a great joy to contemplate such grandeur, and I imagine that this was the source of the overwhelming happiness that St. Alfonso felt in his last three days. He was experiencing a pre-taste of his coming encounter with Our Lord Jesus Christ.

Third, it is interesting to note that St. Alfonso had a special gift for conversation. We know well that many saints are called to be silent and in this path they sanctify themselves. But it is also true that other saints are called to speak and talk in different types of conversations.

What is the gift or the charisma of conversation? It is a communicative form of the love of God, the Holy Church, and the Catholic cause that overflows from the heart of the one who speaks. A conversation can be a grace, and such a conversation can be the fruit of a charisma that comes from Our Lady to make a relationship a means for persons to sanctify themselves.

Let us ask St. Alfonso Rodriguez to help us follow his example of humility, his sense of the grandeur of God, and his fruitful conversations.
~ Late Prof. Plinio Corrêa de Oliveira